விருதுநகர் அருகே சாலையோரம் நின்றிருந்தவர் மீது கார் மோதிய விபத்தில் சம்பவ இடத்திலேயே படுகாயம் அடைந்து செவ்வாய்கிழமை இரவு உயிரிழந்தார்.
விருதுநகர் அருகே மூளிப்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் பால்பாண்டி(37), கருப்பசாமி(30). சகோதர்களான இவர்கள் இருவரும் ஆமத்தூர் சாலையோரத்தில் பெட்ரோல் பங்க் முன்பு நின்று பேசிக்கொண்டிருந்தார்களாம். அப்போது, சிவகாசியில் இருந்து விருதுநகர் நோக்கி சென்ற கார் ஒட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து கருப்பசாமி மீது மோதியது.
இதில், சம்பவ இடத்திலேயே கருப்பசாமி படுகாயம் அடைந்து உயிரிழந்தார். இது தொடர்பாக சகோதரர் பால்பாண்டி ஆமத்தூர் காவல் நிலையத்தில் புகார் செய்தார். அதன் பேரில் போலீஸார் கார் ஓட்டுநரான பார்த்திபனூரைச் சேர்ந்த சரவணக்குமாரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.