முகப்பு
தற்போதைய செய்திகள்

லாரி மோதிய விபத்தில் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கத் தலைவர் மரணம்

பரங்கிப்பேட்டை அகரம் ரயிலடி பகுதியைச் சேர்ந்தவர் ரமேஷ் (45). தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கத் தலைவராக உள்ள இவர் தனது மோட்டார் சைக்கிளில் வீட்டிலிருந்து புறப்பட்டு சிறுது தூரம் சென்ற போது,

Updated On : 5 ஜனவரி, 2024 at 5:29 AM
பகிர்:

சிதம்பரம் அருகே லாரி மோட்டார் சைக்கிளில் சென்ற தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கத் தலைவர் ரமேஷ் (45) ஞாயிற்றுக்கிழமை இறந்தார்.

பரங்கிப்பேட்டை அகரம் ரயிலடி பகுதியைச் சேர்ந்தவர் ரமேஷ் (45). தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கத் தலைவராக உள்ள இவர் தனது மோட்டார் சைக்கிளில் வீட்டிலிருந்து புறப்பட்டு சிறுது தூரம் சென்ற போது, சிதம்பரம் நோக்கி வேகமாக வந்த லாரி மோதியது. இதில் ரமேஷ் தூக்கி வீசப்பட்டு தலையில் பலத்த காயமுற்று சம்பவ இடத்திலேயே இறந்தார். ரமேஷிற்கு கீதா என்ற மனைவியும், செல்வராகவன் (8) என்ற மகனும், சுவேதா (10) என்ற மகளும் உள்ளனர். தகவல் அறிந்த சிதம்பரம் டிஎஸ்பி ஆர்.ராஜாராம் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினார். இதுகுறித்து பரங்கிப்பேட்டை போலீஸார் வழக்குப் பதிந்துள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.