ஆனழகன் போட்டி: மிஸ்டர் தமிழ்நாடு பட்டம் வென்ற அண்ணாமலைப் பல்கலை ஊழியருக்கு பாராட்டு
ஆனழகன் போட்டியில் மிஸ்டர் தமிழ்நாடு பட்டம் வென்ற அண்ணாமலைப் பல்கலைக்கழக ஊழியருக்கு பல்கலைக்கழக நிர்வாகி ஷிவ்தாஸ்மீனா பாராட்டு தெரிவித்தார்.
ஆனழகன் போட்டியில் மிஸ்டர் தமிழ்நாடு பட்டம் வென்ற அண்ணாமலைப் பல்கலைக்கழக ஊழியருக்கு பல்கலைக்கழக நிர்வாகி ஷிவ்தாஸ்மீனா பாராட்டு தெரிவித்தார்.
அண்மையில் வேலூர் மாவட்டம் ஆம்பூரில் நடைபெற்ற ஆனழகன் போட்டியில் அண்ணாமலைப் பல்கலைக்கழக தேர்வுத்துறை அலுவலக உதவியாளர் ஆர்.பிரபு பங்கேற்று மிஸ்டர் தமிழ்நாடு பட்டத்தை வென்று, மிஸ்டர் இந்தியா போட்டிக்கு தேர்வு செய்யப்பட்டார். பின்னர் மகராஷ்டிராவில் நடைபெற்ற மிஸ்டர் இந்தியா போட்டியில் பங்கேற்று 10-ம் இடத்தை பெற்றாம் என்பது குறிப்பிடத்தக்கது.
மிஸ்டர் தமிழ்நாடு பட்டம் பெற்ற பல்கலைக்கழக ஊழியர் ஆர்.பிரபுவிற்கு, பல்கலைக்கழக நிர்வாகி ஷிவ்தாஸ்மீனா திங்கள்கிழமை கோப்பையினை வழங்கிப் பாராட்டினார். இந்நிகழ்ச்சியில் பல்கலைக்கழக மாவட்ட வருவாய் அலுவலர்கள் தினேஷ் பொன்ராஜ் ஆலிவலர், டி.கிருஸ்துராஜ், தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி ஏ.ரகுபதி ஆகியோர் பங்கேற்று பாராட்டினர்.