முகப்பு
தற்போதைய செய்திகள்

புதுக்கோட்டை திருவரங்குளம் ஸ்ரீஅரங்குளநாதர் பெரியநாயகி அம்பாள் கோயிலில் இரட்டைத் தேரோட்டம்

புதுக்கோட்டை திருவரங்குளம் ஸ்ரீஅரங்குளநாதர் பெரியநாயகிஅம்பாள்  கோயிலில் வைகாசி தேரோட்டம் இன்று நடைபெற்றது கடந்த  2ம்தேதி கொடியேற்றத்துடன் திருவிழா தொடங்கி ஒவ்வொரு நாளும்

Updated On : 10 ஜூன், 2014 at 12:14 PM
பகிர்:
Updated On : 5 ஜனவரி, 2024 at 11:03 AM

புதுக்கோட்டை திருவரங்குளம் ஸ்ரீஅரங்குளநாதர் பெரியநாயகிஅம்பாள்  கோயிலில் வைகாசி தேரோட்டம் இன்று நடைபெற்றது கடந்த  2ம்தேதி கொடியேற்றத்துடன் திருவிழா தொடங்கி ஒவ்வொரு நாளும் மண்டகப்படிதார்கள் சார்பில் சாமிக்கு 18வகையான அபிஷேகங்கள் பல்லாக்கு ரதத்தில் சுவாமி வீதியுலா நடைபெற்று வந்தது இன்று 9ம்நாள்  திருவிழாவை முன்னிட்டு விழாவின் முக்கிய நிகழ்ச்சியான இரட்டைத்தேரோட்டம் நடைபெற்றது.

பெரிய தேரில் ஸ்ரீஅரங்குளநாதர் மற்றும் பெரியநாயகி அம்பாளும் சிறியதேரில் பெரியநாயகி அம்பாளும் எழுந்தருளினர் தேர் காலை 10.05மணிக்கு புறப்பட்டு தெற்குவீதி மெயின் ரோடு வழியாக மதியம் 11.30 மணிக்கு நிலையை வந்தடைந்தது நிகழ்ச்சியில் புதுக்கோட்டை அசோக்நகர் மேட்டுப்பட்டி ஆலங்குடி திருக்கட்டளை கொத்தமங்கலம் கத்தக்குறிச்சி கீழையூர் போன்ற பல்வேறு ஊர்களில் இருந்து 30ஆயிரத்திற்கும் மேற்பட்டடோர் கலந்துகொண்டு விழாவினை சிறப்பித்தனர்.

விழாவில் ஊராட்சி ஓன்றிய ஆணையர் அ.செல்வராஜ் ஓன்றியகவுன்சிலர் ரெ.ஆறுமுகம் ஊராட்சி மனறத்தலைவர் அ.கருப்பையா ஸ்ரீபாரதி நிறுவனங்களின் தலைவர் குரு.தனசேகரன் அரசு ஊர்தி ஓட்டுனர்கள் சங்கத்தின் மாவட்டத்தலைவர் எஸ்.ராஜவேல் தமிழ்நாடு தொடக்கப்பள்ளியின் ஆசிரியர் கூட்டணியின் புதுகை வட்டாரத்தலைவர்ஆ.முருகேசன் மற்றும் பலர் கலந்துகொண்டனர் விழாவிற்கான ஏற்பாடுகளை அறநிலைத்துறை அதிகாரிகள் கோயில் குருக்கள் குமார் வைத்தீஸ்வரன் பொன்னையா கண்னன் மீனாட்சிசுந்தரம் நடராஜன் ஆகியோர் செய்திருந்தனர்.

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.