முகப்பு
தற்போதைய செய்திகள்

சேர்வலாறு, அடவிநயினார் அணைகளின் நீர்மட்டம் உயர்வு

தென்மேற்கு பருவ மழை பெய்வதற்கான அறிகுறி இருந்த போதிலும் பருவ மழை தொடங்கவில்லை. இதனால் தாமிரவருணி பாசனத்தில் கார் பருவ சாகுபடிக்கு அணைகளில் இருந்து தண்ணீர் திறக்கவில்லை

Updated On : 5 ஜனவரி, 2024 at 5:39 AM
பகிர்:

மேற்குத் தொடர்ச்சி மலையில் நீர்பிடிப்பு பகுதியில் பெய்த  மிதமான மழையால் சேர்வலாறு, அடவிநயினார் அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. அணைகளின் நீர்மட்டமும் தலா 2 அடி உயர்ந்துள்ளது.

தென்மேற்கு பருவ மழை பெய்வதற்கான அறிகுறி இருந்த போதிலும் பருவ மழை தொடங்கவில்லை. இதனால் தாமிரவருணி பாசனத்தில் கார் பருவ சாகுபடிக்கு அணைகளில் இருந்து தண்ணீர் திறக்கவில்லை. இதனிடையே மேற்குத் தொடர்ச்சி மலையில் அணைகளின் நீர்பிடிப்பு பகுதியில் மிதமான மழை அவ்வப்போது பெய்து வருகிறது.வெள்ளிக்கிழமை காலை நிலவரப்படி பாபநாசம் அணையில் 5 மி.மீ மழையும், சேர்வலாறு அணையில் 1 மி.மீ மழையும், கடனாநதி அணையில் 1 மி.மீ மழையும், குண்டாறு அணையில் 19 மி.மீ மழையும், அடவிநயினார் அணையில் 20 மி.மீ மழையும் பதிவாகியிருந்தது.

பாபநாசம் அணைக்கு விநாடிக்கு 530.32 கனஅடியும், ராமநதி அணைக்கு விநாடிக்கு 25.51 கனஅடியும், குண்டாறு அணைக்கு விநாடிக்கு 12 கனஅடியும், அடவிநயினார் அணைக்கு விநாடிக்கு 28 கனஅடியும் நீர்வரத்து இருந்தது. பாபநாசம் அணையில் இருந்து குடிநீர் தேவைக்காக 205 கனஅடியும், மணிமுத்தாறு அணையில் இருந்து பெருங்கால் பாசனத்துக்கு 75 கனஅடியும் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.

அணைகளின் நீர்மட்டம் உயர்வு: பாபநாசம் அணையின் நீர்மட்டம் 51.20 அடியாகவும்,சேர்வலாறு அணையின் நீர்மட்டம் 2 அடி உயர்ந்து 65.62 அடியாகவும், மணிமுத்தாறு அணையின் நீர்மட்டம் 64.58 அடியாகவும், கடனாநதி அணையின் நீர்மட்டம் 51.00 அடியாகவும், ராமநதி அணையின் நீர்மட்டம் 62.50 அடியாகவும் இருந்தது.

கருப்பாநதி அணையின் நீர்மட்டம் 46.80 அடியாகவும், குண்டாறு அணையின் நீர்மட்டம் 36.10 அடியாகவும், அடவிநயினார் அணையின் நீர்மட்டம் 2 அடி உயர்ந்து 52.00 அடியாகவும், வடக்குபச்சையாறு அணையின் நீர்மட்டம் 2.00 அடியாகவும், நம்பியாறு அணையின் அணையின் நீர்மட்டம் 10.95 அடியாகவும், கொடுமுடியாறு அணையின் நீர்மட்டம் 2.50 அடியாகவும் இருந்தது.

முழு கட்டுரையைப் படிக்க →