சிதம்பரம் நாட்டியாஞ்சலியில் நடிகை ஷோபனா நாட்டியம்!
சிதம்பரம் நடராஜர் கோயிலில் நடைபெற்று வரும் 33-வது ஆண்டு நாட்டியாஞ்சலி விழாவில் 3-ம் நாளான சனிக்கிழமை திரைப்பட நடிகையும், பிரபல பரதநாட்டியக் கலைஞருமான ஹோபனாவின்
சிதம்பரம் நடராஜர் கோயிலில் நடைபெற்று வரும் 33-வது ஆண்டு நாட்டியாஞ்சலி விழாவில் 3-ம் நாளான சனிக்கிழமை திரைப்பட நடிகையும், பிரபல பரதநாட்டியக் கலைஞருமான ஹோபனாவின் நாட்டிய நிகழ்ச்சி நடைபெற்றது.
3-ம் நாள் நாட்டியாஞ்சலி விழாவிற்கு செ.சி.குப்புசாமி தீட்சிதர் தலைமை வகித்தார். நிகழ்ச்சியில் சிதம்பரம் கலைவாணி இசை நாட்டியப்பள்ளி மாணவியர்கள், மதுரை புவனேஸ்வரி இளங்கோவன், பெங்களூர் சிவப்ரியா நாட்டியப்பள்ளி, பெங்களூர் கே.சி.ரூபேஷ், மும்பை சுபாஷின் விஸ்வேஸ்வரன் ஆகியோரின் பரதநாட்டியம் நடைபெற்றது. சென்னை ஸ்ரீதேவி நாட்டியலயா மாணவியர்களின் "பரம்" நாட்டிய நாடகம் வெகு சிறப்பாக இருந்தது.
மலேசியா சுதாநாயர் தாமோதரன், தன்யாஸ்ரீ ஆகியோரின் ஜூகல்பந்தி நடனம், ரேவதி ராமச்சந்திரன் மற்றும் அவரது மாணவியர்களின் பரதம், ஜெர்மனி அம்ரித் ஸ்டெயினின் கதக் நடனம், கோபிகா வர்மா மற்றும் அவரது மாணவியர்களின் மோகினிஆட்டம், லாவண்யாசங்கர் மற்றும் அவரது மாணவியர், திரைப்பட நடிகையும், பிரபல பரதநாட்டியக் கலைஞருமான ஹோபனா மற்றும் அவரது மாணவியரின் பரதம் அனைவரையும் கவர்ந்தது. பின்னர் சென்னை ஸ்ரீகலாரங்கா நாட்டியப்பள்ளி ஸ்ரீதிகா கஸ்தூரிரங்கன், ரேணுகா சுகவனம், தீபா ராமநாதன், சேலம் வித்யாஷேத்ரா ஆகியோரின் பரதநாட்டிய நிகழ்ச்சிகள் நடைபெற்றது.