சிதம்பரத்தில் அண்ணா, எம்ஜிஆர் சிலைகளுக்கு மாலை அணிவித்து வாக்கு சேகரித்த அதிமுக வேட்பாளர்
சிதம்பரம் நாடாளுமன்றத் தொகுதி (தனி) அதிமுக வேட்பாளர் மா.சந்திரகாசி, திங்கள்கிழமை சிதம்பரம் தில்லையம்மன் கோயிலில் சிறப்பு அர்ச்சனை செய்து வழிபட்டார். பின்னர் கட்சி நிர்வாகிகளுடன்
சிதம்பரம் நகரில் நாடாளுமன்றத் தொகுதி அதிமுக வேட்பாளர் மா.சந்திரகாசி அண்ணா மற்றும் எம்ஜிஆர் சிலைகளுக்கு திங்கள்கிழமை மாலை அணிவித்து வாக்குகள் சேகரித்தார்.
சிதம்பரம் நாடாளுமன்றத் தொகுதி (தனி) அதிமுக வேட்பாளர் மா.சந்திரகாசி, திங்கள்கிழமை சிதம்பரம் தில்லையம்மன் கோயிலில் சிறப்பு அர்ச்சனை செய்து வழிபட்டார். பின்னர் கட்சி நிர்வாகிகளுடன் ஊர்வலமாக சென்று வண்டிகேட் பகுதியில் உள்ள அண்ணா மற்றும் எம்ஜிஆர் சிலைகளுக்கும், வடக்குமெயின்ரோடு அம்பேத்கர்சிலை, மேலவீதி பெரியார்சிலை ஆகியவற்றிற்கும் மாலை அணிவித்தார். பின்னர் நான்குவீதிகள் மற்றும் பஸ்நிலையப் பகுதிகளில் பொதுமக்களிடம் தனக்கு வாக்கு சேகரித்தார்.
இந்நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சரும், மாநில மீனவரணி செயலாளருமான கே.கே.கலைமணி, சட்டப்பேரவை உறுப்பினர்கள் சொரத்தூர் ராஜேந்திரன் (நெய்வேலி), செல்வி ராமஜெயம் (புவனகிரி), நாக.முருகுமாறன் (காட்டுமன்னார்கோயில்), முன்னாள் எம்பி இளவரசன், நகரச் செயலாளர் தோப்பு கே.சுந்தர், மாவட்ட பொருளாளர் எம்.எஸ்.என்.குமார், இலக்கிய அணி செயலாளர் சொ.ஜவகர், தொகுதி இணைச் செயலாளர் சி.கே.சுரேஷ்பாபு, நகர அவைத் தலைவர் எம்.யேசுராஜ், நகர துணைச் செயலாளர் டேங்க் ஆர்.சண்முகம், நகர ஜெ பேரவைத் தலைவர் பன்னீர்செல்வம், குமார் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் உடன் சென்று வாக்கு சேகரித்தனர்.