முகப்பு
தற்போதைய செய்திகள்

தனியார் பள்ளி பெற்றோர்-ஆசிரியர் கழகத்தினர் ஆர்ப்பாட்டம்

பள்ளி நுழைவுவாயில் பிரதான பகுதியை இடித்ததை கண்டித்து சிதம்பரத்தில் தனியார் பள்ளி பெற்றோர்-ஆசிரியர் கழகத்தினர் கடந்த இரு தினங்களாக கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

Updated On : 5 ஜனவரி, 2024 at 4:34 AM
பகிர்:

பள்ளி நுழைவுவாயில் பிரதான பகுதியை இடித்ததை கண்டித்து சிதம்பரத்தில் தனியார் பள்ளி பெற்றோர்-ஆசிரியர் கழகத்தினர் கடந்த இரு தினங்களாக கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

சிதம்பரம் வேங்கான்தெருவில் உள்ள தனியார் பள்ளியில் 3500 சதுரஅடி பிரதான நுழைவுவாயில் பகுதியை பாதை மற்றும் சுற்றுச்சுவர் ஆகியவற்றை இடித்து தள்ளியதை கண்டித்தும், பிரதான பாதையை மீண்டும் தொடர்ந்து பயன்படுத்தும் வகையில் உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி செவ்வாய்க்கிழமை, புதன்கிழமை ஆகிய இருநாட்களாக  இந்த ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

ஆர்ப்பாட்டத்திற்கு தனியார் பள்ளி ஆசிரியர் சங்க செயலர் ஆர்.ரமேஷ் தலைமை வகித்தார். பெற்றோர்-ஆசிரியர் கழகத் தலைவர் தில்லை சீனு முன்னிலை வகித்தார். ஆர்ப்பாட்டத்தில் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் பங்கேற்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments