முகப்பு
தற்போதைய செய்திகள்

வேதனையை சாதனையாக கூறுகிறார் கே.எஸ்.அழகிரி எம்பி என பாஜக குற்றச்சாட்டு

கடலூர் மாவட்டத்தில் மாணவர்களுக்கு ரூ.250 கோடிக்கு கல்வி கடன் வழங்கப்பட்டுள்ளது என காங்கிரஸ் அரசின் சாதனையாக கே.எஸ்.அழகிரி எம்பி தெரிவித்துள்ளார். பெருந்தலைவர் காமராஜர்

Updated On : 5 ஜனவரி, 2024 at 4:36 AM
பகிர்:

மாணவர்கள் கல்விக்கடன் பெற்ற வேதனையை, காங்கிரஸ் சாதனையாக கே.எஸ்.அழகிரி எம்பி கூறிகிறார் என கடலூர் மாவட்ட பாரதிய ஜனதா கட்சி குற்றம்சாட்டியுள்ளது.

இதுகுறித்து கடலூர் மாவட்ட பாரதிய ஜனதா கட்சி பொருளாளர் வே.ராஜரத்தினம் வெளியிட்டுள்ள அறிக்கை:

கடலூர் மாவட்டத்தில் மாணவர்களுக்கு ரூ.250 கோடிக்கு கல்வி கடன் வழங்கப்பட்டுள்ளது என காங்கிரஸ் அரசின் சாதனையாக கே.எஸ்.அழகிரி எம்பி தெரிவித்துள்ளார். பெருந்தலைவர் காமராஜர் இருந்த போது இலவச கல்வியை அளித்தார். கல்வி கற்க வறுமை தடையாக இருந்த போது மதியஉணவை இலவசமாக வழங்கினார். காமராஜர் வழியில் வந்ததாக கூறிக்கொள்ளும் காங்கிரஸ், கல்வியை தனியார் மயமாக்கி, கல்வி வியாபாரிகள் ஊக்குவித்து, அவர்கள் பயனடைய கல்விக்கடனை அறிமுகப்படுத்தி, தனியார் கல்வி நிலைய முதலாளிகள் பயனடைய செய்ததே காங்கிரஸ் அரசின் சாதனையாகும்.

மாணவர்களுக்கு கல்விக்கடனை கொடுத்து கடனாளியாக்கியுள்ளனர். எந்த வேலைவாப்பையும் ஏற்படுத்தாக மத்தியில் காங்கிரஸ் அரசு, மாணவர்கள் கடனை எப்படி அடைப்பார்கள் என்பதை தெளிவுபடுத்த வேண்டும். பாரதிய ஜனதா கட்சி வேட்பாளர் நரேந்திரமோடி ஆட்சிக்கு வரும்போது கோடிக்கணக்கான வேலைவாய்ப்புகள் இளைஞர்களுக்கு உருவாக்கப்படும் என வாக்குறுதி அளித்துள்ளார். பாரதிய ஜனதா கட்சி ஆட்சி அமைக்கும் பட்சத்தில், மாணவர்கள் வேலைவாய்ப்பை பெற்று கல்வி கடனை அடைக்க முடியும் என்பதேதான் உண்மை. உண்மையான காமராஜர் ஆட்சியை பாகஜவால்தான் தர முடியும் என வே.ராஜரத்தினம் தெரிவித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.