முகப்பு
தற்போதைய செய்திகள்

வணிகர்களிடம் பணம் பறிமுதல் நடவடிக்கைக்கு எதிர்ப்பு: சேலம், நாமக்கல்லில் நாளை கடையடைப்பு போராட்டம்

வணிகர்கள், வியாபாரிகளிடம் பணத்தை பறிமுதல் செய்யும் தேர்தல் அதிகாரிகளின் நடவடிக்கையைக் கண்டித்து, சேலம், நாமக்கல் மாவட்டங்களில் நாளை (சனிக்கிழமை) கடையடைப்பு போராட்டம்

தற்போதைய செய்திகள்

வணிகர்களிடம் பணம் பறிமுதல் நடவடிக்கைக்கு எதிர்ப்பு: சேலம், நாமக்கல்லில் நாளை கடையடைப்பு போராட்டம்

வணிகர்கள், வியாபாரிகளிடம் பணத்தை பறிமுதல் செய்யும் தேர்தல் அதிகாரிகளின் நடவடிக்கையைக் கண்டித்து, சேலம், நாமக்கல் மாவட்டங்களில் நாளை (சனிக்கிழமை) கடையடைப்பு போராட்டம்

Updated On : 5 ஜனவரி, 2024 at 4:42 AM
பகிர்:

வணிகர்கள், வியாபாரிகளிடம் பணத்தை பறிமுதல் செய்யும் தேர்தல் அதிகாரிகளின் நடவடிக்கையைக் கண்டித்து, சேலம், நாமக்கல் மாவட்டங்களில் நாளை (சனிக்கிழமை) கடையடைப்பு போராட்டம் நடத்தப்படும் என்று வணிகர் சங்கம் அறிவித்துள்ளது.

 மக்களவை தேர்தலுக்காக தமிழகத்தில் தேர்தல் நடத்தை விதிகள் அமல்படுத்தப்பட்டுள்ளன. அதன்படி, ரூ.50 ஆயிரத்துக்கும் மேல் எடுத்துச் செல்லும் தொகைக்கு உரிய ஆவணங்கள் வைத்திருக்க வேண்டும் என்றும் இல்லையென்றால் அவற்றை அதிகாரிகள் பறிமுதல் செய்வார்கள் என்றும் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

 அதன்படி, சேலம் மாவட்டத்தில் கடந்த சில நாள்களாக சோதனையில் ஈடுபட்டுள்ள தேர்தல் பிரிவு அதிகாரிகள், வியாபாரிகள் எடுத்துச் செல்லும் தொகையை பறிமுதல் செய்து வருகின்றனர்.

 இந்த நிலையில் சேலம் மாவட்ட அனைத்து வணிகர்கள் சங்கப் பொதுச் செயலர் ஜெயசீலன் தலைமையில், நகர அனைத்து வணிகர் சங்க அறக்கட்டளைத் தலைவர் எஸ்.சி.நடராஜன், பெயிண்ட் - இரும்பு வணிகர்கள் சங்கத் தலைவர் வசந்தகுமார் உள்ளிட்ட பல்வேறு சங்கங்களின் நிர்வாகிகள், வியாபாரிகள் உள்ளிட்ட 20 பேர் சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்கு வந்திருந்தனர்.

 ஆட்சியரும், மாவட்டத் தேர்தல் அலுவலருமான க.மகரபூஷணத்தை நேரில் சந்தித்து, அதிகாரிகளின் கெடுபிடிகள் குறித்து முறையிட வந்ததாக அவர்கள் தெரிவித்தனர். ஆனால் நீண்ட நேரம் காத்திருந்தும் அவர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

 இதையடுத்து வணிகர் சங்க பொதுச் செயலர் ஜெயசீலன் செய்தியாளர்களிடம் கூறியது:

 நாடாளுமன்றத் தேர்தலைக் காரணம் காட்டி சேலத்தில் வணிகர்கள், வியாபாரிகளிடம் சோதனை நடத்தும் அதிகாரிகள், அவர்கள் வியாபாரம் செய்துவிட்டு வீட்டுக்கு எடுத்துச் செல்லும் பணத்தை பறிமுதல் செய்கின்றனர். தேர்தல் அதிகாரிகளின் நடவடிக்கை மூலம் பணப் பரிவர்த்தனை செய்யும் வணிகர்கள் அடையாளம் காட்டப்படுவதால் எதிர் காலத்தில் அவர்களது உயிருக்கு ஆபத்து ஏற்படும் அபாயம் உள்ளது.

 நடப்பாண்டில் முறையாக வரி செலுத்திய வணிகர்களை வணிக வரித்துறையினர், வருமான வரித்துறையினர் உள்ளிóட்ட பல்வேறு துறையினர் கண்காணித்து வரும் நிலையில் சோதனை என்ற பெயரில் தேர்தல் ஆணையமும் வணிகர்களை அவமானப்படுத்தும் செயலில் ஈடுபட்டுள்ளது.

 மக்களுக்கு பணம் கொடுக்கும் அரசியல் கட்சியினரிடத்தில் சோதனையை, பறிமுதல் நடவடிக்கையையோ எடுக்காத அதிகாரிகள், வங்கிகளின் அருகில் நின்று கொண்டு வியாபாரத்துக்காக பணம் எடுத்துச் செல்பவர்களை பிடித்துச் செல்கின்றனர். வணிகர்கள் அனைவரும் வருமான வரிக் கணக்கு வைத்திருப்பவர்கள்தான். எனவே அவர்கள் எடுக்கும் பணத்துக்கு முறையாக வரி செலுத்தப்பட்டுவிடுகிறு.

 பணம் எடுத்துச் செல்பவர்கள் எந்தெந்த ஆவணங்களை எடுத்துச் செல்ல வேண்டும் என்பதை தேர்தல் ஆணையம் தெளிவுபடுத்த வேண்டும். இது தொடர்பாக அதிகாரிகளை சந்திக்க பலமுறை முயன்றும் அனுமதி மறுக்கப்பட்டுவிட்டது. எனவே தேர்தல் ஆணையத்தின் கவனத்தை ஈர்க்கும் வகையில் சனிக்கிழமை (மார்ச் 15) சேலம், நாமக்கல் மாவட்டங்களில் ஒருநாள் அடையாள கடையடைப்பு போராட்டத்தில் ஈடுபட உள்ளோம்.

 எங்களது கோரிக்கைகளை தேர்தல் ஆணையம் கவனத்தில் எடுத்துக் கொள்ளாவிட்டால் அடுத்த கட்டமாக பெரிய அளவிலான போராட்டத்தில் ஈடுபடுவோம் என்றார் அவர்.

முழு கட்டுரையைப் படிக்க →