சிதம்பரத்தில் அதிமுக தேர்தல் அலுவலகம் திறப்பு: அமைச்சர் எம்.சி.சம்பத் திறந்து வைத்தார்
சிதம்பரம் கீழரதவீதியில் நாடாளுமன்றத் தொகுதி அதிமுக தேர்தல் அலுவலக திறப்பு விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு தேர்தல் பொறுப்பாளரும், முன்னாள் அமைச்சருமான செங்கோட்டையன்
சிதம்பரத்தில் நாடாளுமன்றத் தொகுதி அதிமுக தேர்தல் அலுவலகத்தை அமைச்சர் எம்.சி.சம்பத் ஞாயிற்றுக்கிழமை திறந்து வைத்தார்.
சிதம்பரம் கீழரதவீதியில் நாடாளுமன்றத் தொகுதி அதிமுக தேர்தல் அலுவலக திறப்பு விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு தேர்தல் பொறுப்பாளரும், முன்னாள் அமைச்சருமான செங்கோட்டையன் எம்எல்ஏ முன்னிலை வகித்தார். நகரச் செயலாளர் தோப்பு கே.சுந்தர் வரவேற்றார். தமிழக வணிகவரி மற்றும் பத்திரப்பதிவுத்துறை அமைச்சர் எம்.சி.சம்பத் தலைமை வகித்து தேர்தல் அலுவலகத்தை ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார்.
நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சர் கே.கே.கலைமணி, கடலூர் மேற்கு மாவட்டச் செயலாளரும், கடலூர் நாடாளுமன்றத் தொகுதி அதிமுக வேட்பாளருமான ஏ.அருண்மொழிதேவன், சிதம்பரம் நாடாளுமன்றத் தொகுதி அதிமுக வேட்பாளர் மா.சந்திரகாசி, முன்னாள் எம்பி இளவரசன், கடலூர் மேற்கு மாவட்ட முன்னாள் செயலாளர் வி.கே.மாரிமுத்து, மாவட்ட பொருளாளர் எம்.எஸ்.என்.குமார், சட்டப்பேரவை உறுப்பினர்கள் செல்விராமஜெயம் (புவனகிரி), நாக.முருகுமாறன் (காட்டுமன்னார்கோயில்), மூவேந்தர் முன்னேற்றக்கழக நிர்வாகி ஜி.செல்வராஜ் மற்றும் அதிமுக நிர்வாகிகள் பங்கேற்றனர்.