திருமாவளவனுக்கு இசட் பிரிவு பாதுகாப்பு வழங்க வேண்டும்: நந்தனார் ஆய்வு மையம் கோரிக்கை
விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவனுக்கு இசட் பிரிவு பாதுகாப்பு வழங்க வேண்டும் என மத்திய அரசை வலியுறுத்துவது என நந்தனார் ஆய்வு மையம் தீர்மானம்
விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவனுக்கு இசட் பிரிவு பாதுகாப்பு வழங்க வேண்டும் என மத்திய அரசை வலியுறுத்துவது என நந்தனார் ஆய்வு மையம் தீர்மானம் நிறைவேற்றியுள்ளது.
சிதம்பரத்தில் நந்தனார் ஆய்வு மையம் அரசியல் கலந்தாய்வு கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது. அமைப்பாளர் ரா.காவியச்செல்வன் தலைமை வகித்தார். நிர்வாகிகள் ரா.முத்தையன், துரை.இளம்வழுதி, செ.பேரறிவாளன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். க.தமிழ்மறவன் வரவேற்றார். துணைச் செயலாளர் மு.ஆ.தமிக்குமரன், செல்வ.செல்வமணி, பா.செ.கார்கிவளவன், க.ஆதிமூலம், எ.கண்ணதாசன், கு.குழலரசன், அரச.நந்தன், தெம்மூர் வேந்தன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்
கூட்டத்தில் சிதம்பரம் நாடாளுமன்றத் தொகுதியில் பிரச்சனைக்குரிய பகுதிகளை கண்டறிந்து, துணை ராணுவப்படையை பாதுகாப்பிற்கு ஈடுபடுத்த வேண்டும், வாக்காளிப்பதின் அவதியம் குறித்து, விழிப்புணர்வு பிரசாரத்தை தேர்தல் ஆணையமே நேரடியாக மேற்கொள்ள வேண்டும், தேர்தல் ஆணையம் சோதனை என்ற பெயரில் வியாபாரிகள் மற்றும் பொதுமக்களிடம் மேற்கொள்ளும் கெடுபிடிகளை தளர்த்த வேண்டும், இந்திய தேர்தல் ஆணையம் நோட்டாவிற்கு தனிச்சின்னம் ஒதுக்குவதை தவிர்க்க வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.