முகப்பு
தற்போதைய செய்திகள்

சிதம்பரம் மோட்டார் தொழிலாளர் சங்கத் தேர்தல்: கள்ள ஓட்டு போடச்சென்றவரை தடுத்துவருக்கு அடி-உதை

தேர்தல் அதிகாரி ராதா முன்னிலையில் தேர்தல் நடைபெற்றது. இத்தேர்தலில் தற்போது தலைவராக உள்ள ராஜேந்திரன் தலைமையில் ஒரு அணியும், கே.பி.ராஜா தலைமையில் ஒரு அணியும், சுந்தரவேல்

Updated On : 5 ஜனவரி, 2024 at 4:51 AM
பகிர்:

சிதம்பரம் பேருந்து நிலையத்தில் சிதம்பரம் மோட்டார் தொழிலாளர் சங்கத் தேர்தல் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. கள்ளஓட்டு போடச்சென்றவரை தடுத்த நடத்துநர் தாக்கப்பட்டார்.

தேர்தல் அதிகாரி ராதா முன்னிலையில் தேர்தல் நடைபெற்றது. இத்தேர்தலில் தற்போது தலைவராக உள்ள ராஜேந்திரன் தலைமையில் ஒரு அணியும், கே.பி.ராஜா தலைமையில் ஒரு அணியும், சுந்தரவேல் தலைமையில் ஒரு அணியும் போட்டியிட்டது. மொத்தம் 711 பேர் வாக்காளர்கள். 631 பேர் வாக்களித்தனர்.

ஞாயிற்றுக்கிழமை காலை தேர்தல் தொடங்கியதும், அடையாள அட்டை இல்லாதவர் கள்ள ஓட்டு போடச்சென்றதாகவும், அவரை தடுத்த தனியார் பஸ் நடத்துநர் ராஜேஷ் (26) என்பவர் தாக்கப்பட்டதாக தெரிகிறது. காயமடைந்த அவர் சிதம்பரம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வீடு திரும்பினார். பின்னர் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் தேர்தல் நடைபெற்றது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.