முகப்பு
தற்போதைய செய்திகள்

சிதம்பரம் தொகுதியில் இதுவரை யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லை: அரியலூர் மாவட்ட ஆட்சியர் தகவல்

சிதம்பரம் நாடாளுமன்றத் தனி தொகுதியில் போட்டியிட திங்கள்கிழமை வரை யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லை என சிதம்பரம் நாடாளுமன்றத் தொகுதி தேர்தல் அதிகாரியும், அரியலூர் மாவட்ட

Updated On : 5 ஜனவரி, 2024 at 4:51 AM
பகிர்:

சிதம்பரம் நாடாளுமன்றத் தனி தொகுதியில் போட்டியிட திங்கள்கிழமை வரை யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லை என சிதம்பரம் நாடாளுமன்றத் தொகுதி தேர்தல் அதிகாரியும், அரியலூர் மாவட்ட ஆட்சியருமான இ.சரவணவேல்ராஜ் தெரிவித்தார்.

சிதம்பரத்தில் தேர்தல் அலுவலர்கள் ஆய்வுக்கூட்டத்தில் பங்கேற்ற அவர், பின்னர் செய்தியாளரிடம் தெரிவித்தது: சிதம்பரம் உதவிஆட்சியர் அலுவலகத்தில் சிதம்பரம், புவனகிரி, காட்டுமன்னார்கோயில் சட்டப்பேரவைத்தொகுதிக்குட்பட்ட பறக்கும்படை, கண்காணிப்புக்குழு, வீடியோ கண்காணிப்புக்குழு ஆகியோருக்கான ஆய்வுக்கூட்டம் எனது தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் இந்திய தேர்தல் ஆணைய விதிமுறைக்குட்பட்டு தேர்தல் நடத்துவது குறித்து அறிவுறுத்தப்பட்டது. தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் செலவிணங்களை கண்காணித்து கணக்கிடுவது குறித்தும் அறிவுறுத்தப்பட்டது. சிதம்பரம் நாடாளுமன்றத் தொகுதியில் பதற்றமான வாக்குச்சாவடிகள் குறித்து இதுவரை எனக்கு எதுவும் தெரியவில்லை என ஆட்சியர் இ.சரவணவேல்ராஜ் தெரிவித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.