முகப்பு
தற்போதைய செய்திகள்

பிளஸ்டூ மாணவியை கடத்திச்சென்றதாக அவரது தந்தை புகார்

சிதம்பரம் அருகே பின்னத்தூரைச் சேர்ந்த ராதாகிருஷ்ணன் மகள் அபிநயா (17). இவர் சிதம்பரம் அரசினர் மகளிர் மேல்நிலைப்பள்ளியில் கடந்த மார்ச் 24-ம் தேதி தேர்வெழுத சென்றவர் வீடு திரும்பிவில்லை.

Updated On : 5 ஜனவரி, 2024 at 4:52 AM
பகிர்:

சிதம்பரத்தில் பிளஸ்டூ தேர்வு எழுதிய மாணவியை கடத்திச் சென்றதாக அவரது தந்தை சிதம்பரம் நகர காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

சிதம்பரம் அருகே பின்னத்தூரைச் சேர்ந்த ராதாகிருஷ்ணன் மகள் அபிநயா (17). இவர் சிதம்பரம் அரசினர் மகளிர் மேல்நிலைப்பள்ளியில் கடந்த மார்ச் 24-ம் தேதி தேர்வெழுத சென்றவர் வீடு திரும்பிவில்லை. உறவினர்கள் வீடுகளில் தேடி பார்த்தும் கிடைக்காததால், பள்ளி மாணவியர்களிடம் பெற்றோர் விசாரணை செய்ததில், சேத்தியாத்தோப்பு வானாமாதேவியைச் சேர்ந்த சாரதி என்றபவர் தனது நண்பர்களுடன் சேர்ந்து அபிநயாவை கடத்திச் சென்றதாக அவரது தந்தை சிதம்பரம் நகர காவல் நிலையத்தில் திங்கள்கிழமை புகார் அளித்துள்ளார். இருவரும் வேவ்வேறு சமூகத்தைச் சேர்ந்தவர்கள் என்று கூறப்படுகிறது. புகாரின் பேரில் சிதம்பரம் நகர போலீஸார் வழக்குப் பதிந்து தேடி வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.