பேருந்து சக்கரம் திரும்புவதற்கேற்ப முகப்பு விளக்கும் திரும்பி வெளிச்சம் தரும் கண்டுபிடிப்பு: கலசலிங்கம் மாணவர்கள் சாதனை
ஸ்ரீவில்லிபுத்தூர்பேருந்து சக்கரம் திரும்புவதற்கேற்ப முகப்பு விளக்கும் திரும்பி வெளிச்சம் தரும் வகையில் புதிய கண்டுபிடிப்பை கிருஷ்ணன்கோவில், கலசலிங்கம் மாணவர்கள் வடிவமைத்துள்ளார்கள்.
தற்போதைய செய்திகள்பேருந்து சக்கரம் திரும்புவதற்கேற்ப முகப்பு விளக்கும் திரும்பி வெளிச்சம் தரும் கண்டுபிடிப்பு: கலசலிங்கம் மாணவர்கள் சாதனை
ஸ்ரீவில்லிபுத்தூர்பேருந்து சக்கரம் திரும்புவதற்கேற்ப முகப்பு விளக்கும் திரும்பி வெளிச்சம் தரும் வகையில் புதிய கண்டுபிடிப்பை கிருஷ்ணன்கோவில், கலசலிங்கம் மாணவர்கள் வடிவமைத்துள்ளார்கள்.
ஸ்ரீவில்லிபுத்தூர்பேருந்து சக்கரம் திரும்புவதற்கேற்ப முகப்பு விளக்கும் திரும்பி வெளிச்சம் தரும் வகையில் புதிய கண்டுபிடிப்பை கிருஷ்ணன்கோவில், கலசலிங்கம் மாணவர்கள் வடிவமைத்துள்ளார்கள்.
கலசலிங்கம் பல்கலைக்கழகத்தில் மூன்றாம் ஆண்டு இயந்திரவியல் துறையில் படிக்கும் மாணவர்கள் ஜி.சதாம் உசேன், டி.யுவராஜ், எஸ்.அழகர்ராஜா, ஜி.வெங்கடேஷ், எம்.வெற்றிவேல், ஆர்.வெங்கடேஷ் ஆகியோர் இணைந்து துறைத் தலைவர் ஜெயக்குமார், பேராசிரியர் எம்.எஸ்.அபிலாஷ் ஆகியோரின் ஆலோசனையின் படி இந்த கருவியை வடிவமைத்துள்ளார்கள்.இந்த அமைப்பானது நான்கு சக்கர வாகனத்தின் ஸ்டியரிங்கை திருப்பும் போது அந்த கோணத்திலேயே வாகனத்தின் இரு முகப்பு விளக்குகளும் திரும்புமாறு வடிவமைக்கப்பட்டுள்ளது.
முகப்பானது 45 டிகிரி கோணத்தில் மட்டுமே திரும்பக் கூடியது. ஸ்டியரிங் பழைய நிலைக்கு வரும்போது முகப்பு விளக்கும் அதன் பழைய நிலையை அடைந்து விடும்.இது கியர், ராக் அன்பினியன், எம்.எஸ்.பிரேம் ஆகிய உதிரி பாகங்களால் வடிவமைக்கப்பட்டுள்ளது.இயங்கும் விதம்: ஸ்டியரிங் ராடுடன் ஒரு சிறிய கியர் (50 பற்கள்) பொருத்தப்பட்டுள்ளது. அதனுடன் இணைக்கப்பட்டுள்ள கியரும் சுற்றி ராக் அன்பினியனையும் சுற்ற வைக்கிறது. முகப்பு விளக்கு ராக் அன்பினியனுடன் இணைக்கப்பட்டுள்ளதால் அதனுடன் சேர்ந்து முகப்பு விளக்கும் திரும்புகிறது.இந்த அமைப்பினால் சாலை வளைவுகளிலும், மலைகளின் கொண்டை ஊசி வளைவுகளிலும் இரவு நேரங்களில் வாகனத்தைத் திருப்பும்போது எந்த வித இடையூறுமின்றி திரும்ப ஏதுவாக இருக்கும்.
இதனால் இரவு நேரங்களில் சாலை வளைவுகளில் ஏற்படும் விபத்துக்களை தவிர்க்கலாம்.இந்த அமைப்பில் பஸ், வேன், லாரிகளுக்கு ஏற்ப சில மாற்றங்களை செய்ய வேண்டும்.இந்த வடிவமைப்பு பேராசிரியர் சிவசுப்பிரமணியன் ஆலோசனயின் பேரில் சென்னையில் உள்ள காப்புரிமைக் கழகத்திற்கு காப்புரிமை பெற விண்ணப்பம் செய்யப்பட்டுள்ளது என்று மாணவர் சதாம் உசேன் கூறினார்.
இந்த அமைப்பை உருவாக்கிய மாணவர்களையும், ஆலோசனை வழங்கிய பேராசிரியர்களையும் வேந்தர் க.ஸ்ரீதரன், துணை வேந்தர் டாக்டர் எஸ்.சரவணசங்கர், பதிவாளர் டாக்டர் வெ.வாசுதேவன் மற்றும் பேராசிரியர்கள் பாராட்டினர்.