முகப்பு
தற்போதைய செய்திகள்

சிதம்பரத்தில் பலத்த மழை: சாலைகளில் பெருக்கெடுத்து ஓடிய மழைநீர்

சிதம்பரம் நகரில் திங்கள்கிழமை அதிகாலை 3 மணி முதல் பலத்த மழை பெய்தது. காலை 3 மணிக்கு தொடங்கிய பலத்த மழை 8 மணிக்கு வரை பெய்தது. பின்னர் லேசான தூரலுடன் வானம் மேகமூட்டத்துடன்

Updated On : 5 ஜனவரி, 2024 at 5:11 AM
பகிர்:

சிதம்பரத்தில் திங்கள்கிழமை பலத்த மழை பெய்தது. சாலைகளில் நீர் பெருக்கெடுத்து ஓடியதால், கடும் வெயிலில் அவதியுற்ற மக்கள் மகிழ்ச்சியுற்றனர்.

சிதம்பரம் நகரில் திங்கள்கிழமை அதிகாலை 3 மணி முதல் பலத்த மழை பெய்தது. காலை 3 மணிக்கு தொடங்கிய பலத்த மழை 8 மணிக்கு வரை பெய்தது. பின்னர் லேசான தூரலுடன் வானம் மேகமூட்டத்துடன் காட்சியளித்தது. பலத்த மழையில் நகரில் அனைத்து சாலைகளில் நீர் பெருக்கெடுத்து ஓடியது. கடந்த நவம்பர் மாதம் பெய்த மழைக்கு பிறகு கடும் வெயில் அடித்து வந்த வேளையில், நீண்ட மாதங்கள் கழித்து பெய்த பலத்த மழையினால் பூமி குளிர்ந்து, வெப்பம் இல்லாமல் இருந்ததால் பொதுமக்கள் மிகவும் மகிழ்ச்சியுற்றனர்.

மழை அளவு விபரம்: சிதம்பரம்- 49 மி.மீ, அண்ணாமலைநகர்- 51 மி.மீ, புவனகிரி - 28 மி.மீ, பரங்கிப்பேட்டை 24 மி.மீ, சேத்தியாத்தோப்பு 24.2 மி.மீ, காட்டுமன்னார்கோயில்-46 மி.மீ, லால்பேட்டை- 36 மி.மீ.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.