முகப்பு
தற்போதைய செய்திகள்

சிதம்பரம் அருகே சாலையோரம் தீவைத்து எரித்த நிலையில் மோட்டார் சைக்கிள்: போலீஸார் விசாரணை

சிதம்பரம் அருகே சாலையோரம் மர்மமான முறையில் மோட்டார் சைக்கிள் ஒன்று தீவைத்து எரிக்கப்பட்ட நிலையில் அநாதையாக நின்று கொண்டிருந்தது. இதுகுறித்து தகவல் அறிந்த போலீஸார் மற்றும்

Updated On : 5 ஜனவரி, 2024 at 5:11 AM
பகிர்:

சிதம்பரம் அருகே சாலையோரம் மர்மமான முறையில் மோட்டார் சைக்கிள் ஒன்று தீவைத்து எரிக்கப்பட்ட நிலையில் அநாதையாக நின்று கொண்டிருந்தது. இதுகுறித்து தகவல் அறிந்த போலீஸார் மற்றும் தடயஅறிவியல்துறையினர் பார்வையிட்டு விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

சிதம்பரம் அருகே பின்னத்தூர் செல்லும் சாலையில் நக்கரவந்தன்குடி எனுமிடத்தில் கான்சாகீப்வாய்க்கால் அருகே உள்ள சாலையோரம் மர்மமான முறையில் தீவைத்து எரிக்கப்பட்ட நிலையில் ஹீரோ ஹோண்டா ஸ்பெளண்டர் மோட்டார் சைக்கிள் ஒன்று அநாதையாக நின்று கொண்டிருந்தது. தகவல் அறிந்த சிதம்பரம் டிஎஸ்பி ஆர்.ராஜாராம், தடயஅறிவியல்துறை நிபுணர் சண்முகம் மற்றும் போலீஸார் அங்கு சென்று பார்வையிட்டு தீவைத்து எரிக்கப்பட்ட மோட்டார் சைக்கிளை கைப்பற்றி கிள்ளை காவல் நிலையத்திற்கு அனுப்பி வைத்தனர். மேலும் ரேகைகள் பதிவு செய்யப்பட்டு போலீஸார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.