முகப்பு
தற்போதைய செய்திகள்

தண்ணீர் தொட்டியில் விழுந்து 9 வயது சிறுவன் சாவு

சிதம்பரம் தாலுக்கா புவனகிரி அருகே உள்ள வடக்குதிட்டை கிராமத்தில் வசிப்பவர் சிதம்பரநாதன். இவர் நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனத்தில் ஒப்பந்த ஊழியராக பணியாற்றி வருகிறார். இந்நிலையில்

Updated On : 5 ஜனவரி, 2024 at 5:11 AM
பகிர்:

கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே தண்ணீர் தொட்டியில் 9வயது சிறுவன் விழுந்து மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு இறந்து போனான்.

சிதம்பரம் தாலுக்கா புவனகிரி அருகே உள்ள வடக்குதிட்டை கிராமத்தில் வசிப்பவர் சிதம்பரநாதன். இவர் நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனத்தில் ஒப்பந்த ஊழியராக பணியாற்றி வருகிறார். இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமை இரவு பணியிலிருந்து வீடு திரும்பிய இவர் பின்புறம் உள்ள கிணற்றில் குளிக்கச் சென்றுள்ளார். அப்போது அவரது 2-ம் வகுப்பு படிக்கும் 9 வயது மகன் ராகவேந்திரன், அவரது பினனாடியே தெரியாமல் வந்துள்ளார். வீட்டிற்கும் கிணற்றிற்கும் நடுவே உள்ள தண்ணீர் தொட்டியில் விழுந்துள்ளார். இது தெரியாமல் தந்தை சிதம்பரநாதன் குளித்துவிட்டு வீட்டிற்குள் சென்றுள்ளார். அங்கு மகனை காணாதது கண்டு தோட்டத்திற்கு தேடி வந்து பார்த்த தண்ணீர் தொட்டியில் மூச்சு திணறிய நிலையில் கிடந்ததை கண்டு, உடனடியாக சிதம்பரம் ராஜா முத்தைய மருத்துவக்கல்லூரி மருத்துவமனையி சிகிச்சைக்கு சேர்த்தார். அங்கு சிகிச்சை பெற்று வந்த சிறுவன் ராகவேந்திரன் திங்கள்கிழமை காலை சிகிச்சை பலனின்றி இறந்தார்.

இதுகுறித்து புவனகிரி போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.