முகப்பு
தற்போதைய செய்திகள்

மேலூர் அருகே முள்கம்பி வேலியைத் தாண்டிய புள்ளிமான் சாவு

மேலூர் சிவகங்கைசாலையில் உள்ள அரசு பல்வகை தொழில்நுட்பக் கல்லூரி பின்புறம் உள்ள வெள்ளைமலையில் அதிகமான புள்ளி மான்கள் வசித்துவருகின்றன. இப்பகுதி கிராமமக்கள் மான்களைப்

Updated On : 5 ஜனவரி, 2024 at 5:14 AM
பகிர்:

மேலூர் அருகே தண்ணீர் குடிப்பதற்காக முள்கம்பிவேலியைத் தாண்டிய புள்ளிமான் கீழேவிழுந்து இறந்தது.

மேலூர் சிவகங்கைசாலையில் உள்ள அரசு பல்வகை தொழில்நுட்பக் கல்லூரி பின்புறம் உள்ள வெள்ளைமலையில் அதிகமான புள்ளி மான்கள் வசித்துவருகின்றன. இப்பகுதி கிராமமக்கள் மான்களைப் பாதுகாத்து வருகின்றனர். திங்கள்கிழமை அதிகாலையில் கூலிபட்டிசாலையோரத்திலுள்ள விநாயகர்கோவில் அருகே பள்ளத்தில் தண்ணீர்குடிக்கவந்த 2 வயது புள்ளிமான் முள்கம்பிவேலியைத் தாண்டிக் குதித்துள்ளது. அப்போது கம்பிவேலியில் சிக்கி கீழேவிழுந்த புள்ளிமான் அதேயிடத்தில் இறந்தது.

தகவலறிந்த வனத்துறையினர் இறந்த மானைக் கைப்பற்றி விசாரித்துவருகின்றனர். வெள்ளை மலையில் வசித்துவரும் மான்கள் மேலூர்-சிவகங்கை சாலையை இரவில் கடக்கும்போது வாகனங்களில் அடிபட்டு இறக்கின்றன. இதனை தவிர்க்க வனத்துறையினர் சாலையோரத்தில் எச்சரிக்கை பலகைகளை வைக்கவேண்டும் என இப்பகுதி கிராமமக்கள் வலியுறுத்தினர்.

முழு கட்டுரையைப் படிக்க →