முகப்பு
தற்போதைய செய்திகள்

மேலூர் நான்குவழிச்சாலையில் அடுத்தடுத்து லாரிகள் விபத்து: நெல்லையை சேர்ந்த 8 பேர் காயம்

தூத்துக்குடியிலிருந்து விழுப்புரத்துக்கு கன்டெய்னர் ஏற்றிச்சென்ற லாரி மேலூர் நான்குவழிச்சாலையில் முன்னால் மரம் ஏற்றிச்சென்ற லாரிமீது மோதி சேதமடைந்தது. இதில்

Updated On : 5 ஜனவரி, 2024 at 5:15 AM
பகிர்:

மேலூர் நான்குவழிச்சாலையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற லாரி விபத்தில் திருநெல்வேலியை சேர்ந்த 8 பேர் காயமடைந்தனர்.

தூத்துக்குடியிலிருந்து விழுப்புரத்துக்கு கன்டெய்னர் ஏற்றிச்சென்ற லாரி மேலூர் நான்குவழிச்சாலையில் முன்னால் மரம் ஏற்றிச்சென்ற லாரிமீது மோதி சேதமடைந்தது. இதில் லாரிடிரைவர் பாலமுருகன் இடிபாட்டில் சிக்கிக்கொண்டார். தகவலறிந்த மேலூர் தீயணைப்பு மீட்ப்புப் படையினர் மற்றும் போலீஸôர் டிரைவரை மீட்டு மேலூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு அனுப்பி வைத்தனர்.

இந்தமீட்புப்பணி நடைபெற்றுக்கொண்டிருந்தபோது எதிர்திசையில் சென்னையிலிருந்து ரசாயனபவுடர் மூட்டைகள் ஏற்றி திருநெல்வேலிக்குச் சென்றுகொண்டிருந்த லாரி சாலையின் நடுவில் மோதி கவிழ்ந்தது. இதில் மூட்டைகள் சரிந்துவிழுந்தன. இந்த விபத்தில் லாரியில் வந்த நெல்லையைச் சேர்ந்த ஆறுமுகம் (26), பாலமுருகன் (17), முத்து (30), சக்திலட்சுமி (18), கனகவள்ளி (34), கண்ணன் (21) உள்ளிட்ட 7 பேர் காயமடைந்தனர்.

இவர்கள் மேலூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அதில் 4 பேர் மதுரை அரசு மருத்துவமனைக்கு தீவிரச்சிகிச்சைக்கு அனுப்பிவைக்கப்பட்டனர்.

இந்தவிபத்துக்கள் குறித்து மேலூர் போலீ!ஸார் விசாரித்து வருகின்றனர்.

முழு கட்டுரையைப் படிக்க →