நெல்லை, தென்காசி, தூத்துக்குடியில் அதிமுக முன்னிலை: கன்னியாகுமரியில் பாஜக முன்னிலை
திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி மக்களவைத் தொகுதிகளில் அதிமுக வேட்பாளர்கள் தொடர்ந்து முன்னிலையில் இருந்து வருகின்றனர். கன்னியாகுமரி மக்களவைத் தொகுதியில் பாரதிய ஜனதா கட்சி
திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி மக்களவைத் தொகுதிகளில் அதிமுக வேட்பாளர்கள் தொடர்ந்து முன்னிலையில் இருந்து வருகின்றனர். கன்னியாகுமரி மக்களவைத் தொகுதியில் பாரதிய ஜனதா கட்சி வேட்பாளர் பொன். ராதாகிருஷ்ணன் தொடர்ந்து முன்னிலையில் உள்ளார்.
திருநெல்வேலி மக்களவைத் தொகுதியில் 14 ஆவது சுற்று முடிவில் அதிமுக வேட்பாளர் பிரபாகரன், 2,91,393 வாக்குகளும், திமுக வேட்பாளர் தேவதாசசுந்தரம் 2,01,025 வாக்குகளும் பெற்றிருந்தனர். திமுக வேட்பாளரை விட அதிமுக வேட்பாளர் பிரபாகரன் 90,268 வாக்குகள் அதிகம் பெற்று தொடர்ந்து முன்னிலையில் உள்ளார்.
தென்காசி மக்களவைத் தொகுதியில் 14 ஆவது சுற்றில் அதிமுக வேட்பாளர் வசந்தி முருகேசன், 3,11,818 வாக்குகளும், புதிய தமிழகம் வேட்பாளர் கிருஷ்ணசாமி 1,97,004 வாக்குகளும் பெற்றிருந்தனர். திமுக கூட்டணி வேட்பாளரை விட அதிமுக வேட்பாளர் வசந்திமுருகேசன், 1,14,814 வாக்குகள் அதிகம் பெற்றும் முன்னிலை இருந்து வருகிறார்.
தூத்துக்குடி மக்களவைத் தொகுதியில் 10 ஆவது சுற்றில் அதிமுக வேட்பாளர் ஜெ.ஜெ. நட்டர்ஜி 2,17,573 வாக்குகளும், திமுக வேட்பாளர் ஜெகன், 1,47,585 வாக்குகளும், மதிமுக வேட்பாளர் ஜோயல், 1,00,507 வாக்குகளும் பெற்றிருந்தனர்.திமுக வேட்பாளர் ஜெகனை விட அதிமுக வேட்பாளர் 69,978 வாக்குகள் அதிகம் பெற்று தொடர்ந்து முன்னிலையில் இருந்து வருகிறார்.
கன்னியாகுமரி மக்களவைத் தொகுதியில் 12 ஆவது சுற்றில் பாரதிய ஜனதா கட்சி வேட்பாளர் பொன். ராதாகிருஷ்ணன், 1,57,591 வாக்குகளும், காங்கிரஸ் வேட்பாளர் வசந்தகுமார் 1,25,836 வாக்குகளும் பெற்றிருந்தனர். காங்கிரஸ் வேட்பாளர் விட பாஜக வேட்பாளர் பொன். ராதாகிருஷ்ணன், 31,755 வாக்குகள் அதிகம் பெற்று தொடர்ந்து முன்னிலையில் இருந்து வருகிறார்.