நெல்லை தொகுதியில் நோட்டாவுக்கு 8,781 வாக்குகள்: அதிமுக தொடர்ந்து முன்னிலை
திருநெல்வேலி மக்களவைத் தொகுதியில் 12 ஆவது சுற்று முடிவில் அதிமுக வேட்பாளர் 81,345 வாக்குகள் அதிகம் பெற்று முன்னிலையில் உள்ளார். இத்தொகுதியில் நோட்டாவுக்கு 8,781 வாக்குகள் பதிவாகியுள்ளது.
திருநெல்வேலி மக்களவைத் தொகுதியில் 12 ஆவது சுற்று முடிவில் அதிமுக வேட்பாளர் 81,345 வாக்குகள் அதிகம் பெற்று முன்னிலையில் உள்ளார். இத்தொகுதியில் நோட்டாவுக்கு 8,781 வாக்குகள் பதிவாகியுள்ளது.
திருநெல்வேலி மக்களவைத் தொகுதியில் 12 ஆவது சுற்றில் வேட்பாளர்கள் பெற்ற வாக்குகள் விவரம்: பிரபாகரன் (அதிமுக) 2,51,281 வாக்குகளும், தேவதாசசுந்தரம் (திமுக) 1,69,936 வாக்குகளும், சிவனணைந்தபெருமாள் (தேமுதிக) 81,891 வாக்குகளும், ராமசுப்பு (காங்கிரஸ்) 41,965 வாக்குகளும், இந்திய மக்கள் கழக வேட்பாளர் தேவநாதன்யாதவ் 12,286 வாக்குகளும், எஸ்.டி.பி.ஐ. கட்சி வேட்பாளர் முகம்மதுமுபாரக் 5,611 வாக்குகளும் பெற்றனர்.
திமுக வேட்பாளரை அதிமுக வேட்பாளர் பிரபாகரன், 81,345 வாக்குகள் அதிகம் பெற்று முன்னிலையில் உள்ளார். இந்த தொகுதியில் நோட்டாவுக்கு 8,781 வாக்குகள் பதிவாகியுள்ளது. தூத்துக்குடி, தென்காசி, கன்னியாகுமரி தொகுதிகளை விட திருநெல்வேலி மக்களவைத் தொகுதியில் நோட்டாவுக்கு அதிக வாக்குகள் பதிவாகியுள்ளது.