தற்போதைய செய்திகள்

விருதுநகர் அருகே மகனை அடித்து கொன்ற  தந்தை கைது

விருதுநகர் அருகே மதுகுடித்துவிட்டு தகராறு செய்த மகனை குலவிக்கல்லால் தாக்கி கொன்ற தந்தையை பாண்டியன் நகர் போலீஸார் கைது செய்தனர்.

எஸ். பாண்டியன்

விருதுநகர் அருகே மதுகுடித்துவிட்டு தகராறு செய்த மகனை குலவிக்கல்லால் தாக்கி கொன்ற தந்தையை பாண்டியன் நகர் போலீஸார் கைது செய்தனர்.

விருதுநகர் அருகே பாண்டியன் நகரை அடுத்த கருப்பசாமி நகரைச் சேர்ந்த பிச்சைமணி என்பவரின் மகன் தாமரைக்கண்ணன்(31). இவர் வேலைக்குச் செல்லாமல் மதுக்குடித்து விட்டு அடிக்கடி வீட்டில் தகராறு செய்து வந்தாராம். இதேபோல், வியாழக்கிழமை இரவும் வீட்டில் உள்ளவர்களிடம் பிரச்னையில் ஈடுபட்டு அதன் பின்னர் தூங்கச் சென்றதாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரம் அடைந்த பிச்சைமணி ஆழ்ந்து தூங்கிக் கொண்டிருந்த மகனின் தலையில் குலவிக்கல்லால் தாக்கினார்.

இதில், தலையில் பலத்த காயம் அடைந்து சம்பவ இடத்திலேயே தாமரைக்கண்ணன்  உயிரிழந்தார். இது தொடர்பாக பாண்டியன் நகர் போலீஸார் வழக்கு பதிவு செய்து பிச்சைமணியை கைது செய்தனர்.      

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கல்கி - 2 படப்பிடிப்பில் அமிதாப் பச்சன், கமல் ஹாசன்!

எதிர்க்கட்சித் தலைவரா? அல்லது இந்தியாவை எதிர்ப்பவர்களின் தலைவரா? ராகுல் மீது பாஜக எம்.பி. கடும் தாக்கு!

மணிப்பூரில் இடம்பெயர்ந்த மக்களுக்கு 5,000 வீடுகள்: மத்திய அரசு ஒப்புதல்!

எனக்கு தடையாக இருக்கும் அந்த சிலர்... சிவகார்த்திகேயன் பேச்சு!

ஒவ்வொரு குடும்பத்துக்கும் ரூ. 10,000 கருணைத் தொகை! - அதிமுகவின் 3-ம் கட்ட தேர்தல் வாக்குறுதிகள்!

SCROLL FOR NEXT