முகப்பு
தற்போதைய செய்திகள்

நல்ல காலம் பிறக்கும் : பாஜக வெற்றியால் இலங்கை அகதிகள் உற்சாகம்

இலங்கையில் நடைபெற்ற இனப்பிரச்சனை காரணமாக கடந்த 24 ஆண்டுகளாக தமிழக்கத்தில் அகதிகளாக இடம்பெயர்ந்து வந்து

Updated On : 17 மே, 2014 at 11:13 AM
பகிர்:
Updated On : 5 ஜனவரி, 2024 at 10:47 AM

இலங்கையில் நடைபெற்ற  இனப்பிரச்சனை காரணமாக  கடந்த 24 ஆண்டுகளாக தமிழக்கத்தில்  அகதிகளாக இடம்பெயர்ந்து வந்து தற்போது 113 இலங்கை அகதிகள் முகாம்களில் சுமார் 69ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் அகதிகளாக வாழ்ந்து வருகின்றனர்.

1லட்சம் பேர் காவல்துறை பதிவு மூலமாக வெளியில் வாடகை வீடுகள் எடுத்து வாழ்ந்து வருகின்றனர். முகாம்களில் வசிக்கும் மக்களுக்கு தமிழக அரசு சார்பில் இலவச மானியமாக குடும்பத்தலைவர்க்கு 1000 ரூபாய் 12வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு 750 ரூபாய் அதற்கு கீழ்பட்ட குழந்தைகளுக்கு 400ம் வழங்கி வருகின்றனர்.

என்னதான் இலவசத் திட்டங்கள் வழங்கினாலும் சரி இவர்களுக்கு குடியுரிமை கிடையாது. இந்தியாவை தொடர்ந்து 10ஆண்டுகள் ஆண்ட காங்கிரஸ் கட்சி இவர்கள் மீது அக்கரை செலுத்தவில்லை என்றே சொல்லலாம். முகாம்வாசிகளை பொறுத்தவரைக்கும் பாஜக ஆட்சிக்கு வந்தால் இதற்கு நிரந்தர தீர்வு கிடைக்கும் என்ற நம்பிக்கையில் இருந்தனர். அந்தக்கனவு நனவாகிவிடும் என நினைத்து தேர்தல்  முடிவுகளை தொடர்ந்து தொலைகாட்சிகள் வாயிலாக பார்த்து கொண்டு இருந்தனர். தனியாக யார் தயவும் இல்லாமல் பாஜக ஆட்சி அமைக்கப்போகிறது. ஈழத்தமிழர்களுக்கு துரோகம் செய்த காங்கிரஸ் கட்சி இந்தியாவில் திசை தெரியாமல் போனது என்று மகிழ்ந்தனர். இவர்கள் மட்டுமல்லாமல் கனடா, பிரான்ஸ், லண்டன், நார்வே போன்ற பல்வேறு நாடுகளில் இருக்கும் இலங்கைத் தமிழர்களும் ஆட்சி மாற்றம் இந்தியாவில் வந்துவிட்டது என்று வெடி வெடித்தும் இனிப்புகளை ஒருவருக்கொருவர் பறிமாறியும் மகிழ்ந்து கொண்டனர்.

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.