முகப்பு
தற்போதைய செய்திகள்

நெல்லையில் பாரம்பரியப் பொருட்கள் கண்காட்சி

திருநெல்வேலியில் பாரம்பரியப் பொருட்களால் ஏற்பட்ட சமூக முன்னேற்றம் குறித்த விழிப்புணர்வை உருவாக்கும் வகையில் பாரம்பரிய பொருட்கள் இடம்பெற்றக் கண்காட்சி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

Updated On : 5 ஜனவரி, 2024 at 5:18 AM
பகிர்:

திருநெல்வேலியில் பாரம்பரியப் பொருட்களால் ஏற்பட்ட சமூக முன்னேற்றம் குறித்த விழிப்புணர்வை உருவாக்கும் வகையில் பாரம்பரிய பொருட்கள் இடம்பெற்றக் கண்காட்சி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

சர்வதேச அருங்காட்சியக தினத்தை முன்னிட்டு திருநெல்வேலி மாவட்ட அறிவியம் மையம் சார்பில் சேகரிப்புகள் இணைப்பை உருவாக்குதல் என்ற தலைப்பில் பழங்கால பொருட்களால் எவ்வாறு சமூக முன்னேற்றம் ஏற்பட்டது குறித்த பொதுமக்கள், மாணவர்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கத்தில் பாரம்பரிய பொருட்கள் கண்காட்சி நடத்தப்பட்டது.

இக்கண்காட்சியில் உக்கிரன்கோட்டை சேர்ந்த மாணவி வேணிசுபா, சேகரித்த நாணயங்கள், புளியங்குடியை சேர்ந்த 7 ஆம் வகுப்பு மாணவி ஐ. பாத்திமாசமீரா, சேகரித்த 1957 முதல் 1991 ஆம் ஆண்டு வரையில் நடைமுறையில் இருந்த 10 பைசா மற்றும் 1983 முதல் 1990 வரை புழக்கத்தில் இருந்த 20 பைசா நாணயங்கள், உலகம் முழுவதும் அரபு நாடுகள் உள்ளிட்ட பல்வேறு நாடுகளின் அரிய நாணயங்கள், சென்னையை சேர்ந்த மாணவி கேரலின் சேகரித்த அரிய நாணயங்கள், தபால் தலைகள் இடம்பெற்றன.

தூத்துக்குடியை சேர்ந்த ராஜாஸ்டேனிஷ், சேகரித்த பழங்கால வீட்டு உபயோகப் பொருட்கள், கிராம போன், பழங்கால ரேடியோ, டிரான்சிஸ்டர் ரேடியோ, வால்வு ரேடியோ, தபால் தலைகள், கடிகார வகைகள், பிலிம் புரஜக்டர், அரிக்கன் விளக்கு, பழைய கேமரா போன்றவை இடம்பெற்றது.

கண்காட்சி தொடக்க நிகழ்ச்சிக்கு வழக்குரைஞர் ஏ. சண்முகசுந்தரராஜா தலைமை வகி்த்தார். பாளையங்கோட்டை சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரி தேர்வு கட்டுபாட்டு அலுவலர் முனைவர் எம். நாராயணன் கண்காட்சியை தொடங்கி வைத்தார்.மாவட்டத்தில் பல்வேறு பகுதியில் இருந்து மாணவர்கள், பொதுமக்கள் கண்காட்சியை பார்வையிட்டனர்.மாவட்ட அறிவியல் மைய அலுவலர் கே. நவராம்குமார் வரவேற்றார். அறிவியல் மைய கல்வி பிரிவு உதவியாளர் பி. மரியலெனின் நன்றி கூறினார்.

முழு கட்டுரையைப் படிக்க →