முகப்பு
தற்போதைய செய்திகள்

பழனி அருகே மண் சரிந்து இருவர் பலி. ஒருவர் பலத்த காயம்

பழனி அருகே கரிக்காரன்புதூரை அடுத்த அரவங்காட்டு புதூரை சேர்ந்தவர் ராஜாமணி(50).  இவரது மகன் மணிகண்டன்(17).  இவர்கள் இருவரும் செங்கல் சூளைக்கு மண் அள்ளி செல்லும் வேலை செய்து

Updated On : 5 ஜனவரி, 2024 at 5:18 AM
பகிர்:

பழனி அருகே மண் சரிந்து இருவர் சம்பவ இடத்திலேயே பலியாகினர்.  ஒருவர் பலத்த காயமடைந்தார்.

பழனி அருகே கரிக்காரன்புதூரை அடுத்த அரவங்காட்டு புதூரை சேர்ந்தவர் ராஜாமணி(50).  இவரது மகன் மணிகண்டன்(17).  இவர்கள் இருவரும் செங்கல் சூளைக்கு மண் அள்ளி செல்லும் வேலை செய்து வருகின்றனர்.  ஞாயிற்றுக்கிழமை குமரேசன் என்பவர் தோட்டத்தில் மாலைவேளையில் இவர்கள் இருவருடன், அதே பகுதியை சேர்ந்த அம்மாபட்டி மகன் செந்தில்(32) என்பவரும் சேர்ந்து கொண்டு செங்கல் சூளைக்கு மண் அள்ளிக்கொண்டிருந்தனர்.  அப்போது திடீரென மண் சரிந்து மூன்று பேரும் மண்ணில் புதைந்தனர்.  அப்போது மணிகண்டனின் அலறல் குரல் கேட்டு அப்பகுதியே சென்றவர்கள் ஓடிவந்து பார்த்த போது சம்பவத்தை அறிந்து உடனடியாக மணிகண்டனை மீட்டனர்.பின்பு அக்கம்பக்கத்தினர் உதவியுடன் மண்ணை விலக்கி பார்த்த போது ராஜாமணி, செந்தில் இருவரும் மண்ணில் புதைந்து சம்பவ இடத்திலேயே இறந்து போனது தெரியவந்தது.  பலத்த காயமடைந்த மணிகண்டன் பழனி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். 

விபத்து குறித்து பழனி தாலுகா போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.  சம்பவம் நடந்த குமரேசன் என்பவர் தோட்டம் ஆற்றின் ஓரமாக உள்ளது.  இங்கு சுமார் 25 அடி உயரத்துக்கு மண், மணல் அள்ளப்பட்டுள்ளது.  போதிய அனுமதி இன்றி இதுபோன்று மண் அள்ளுவதை அரசு அதிகாரிகள் கண்டு கொள்ளாமல் இருந்துள்ளதே விபத்துக்கு காரணமாகி உள்ளது.  இதுபோன்றே இப்பகுதியில் ஏராளமான இடங்களில் மண் அள்ளப்பட்டு விற்பனை செய்யப்படுகிறது. இனிமேலாவது அதிகாரிகள் இத்தவறை நிறுத்த வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.  

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.