முகப்பு
தற்போதைய செய்திகள்

லாரி மீது பைக் மோதி இளைஞர் பலி

கும்மிடிப்பூண்டி அடுத்த நெல்வாய் பகுதியை சேர்ந்தவர் ஏழுமலை மகன் கணேஷ். இவர் ஞாயிற்றுக்கிழமை தமிழக எல்லையோர ஆந்திர மாநில பகுதியான பூண்டி என்ற பகுதிக்கு சென்று பைக்கில் வீடு திரும்பிக்

தற்போதைய செய்திகள்

லாரி மீது பைக் மோதி இளைஞர் பலி

கும்மிடிப்பூண்டி அடுத்த நெல்வாய் பகுதியை சேர்ந்தவர் ஏழுமலை மகன் கணேஷ். இவர் ஞாயிற்றுக்கிழமை தமிழக எல்லையோர ஆந்திர மாநில பகுதியான பூண்டி என்ற பகுதிக்கு சென்று பைக்கில் வீடு திரும்பிக்

Updated On : 5 ஜனவரி, 2024 at 5:18 AM
பகிர்:

கும்மிடிப்பூண்டி அடுத்த எளாவூர் அருகே ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற சாலை விபத்தில் நின்றுக் கொண்டிருந்த லாரி மீது பைக் மோதியதில் கணேஷ்(25) பரிதாபமாக பலியானார்.

கும்மிடிப்பூண்டி அடுத்த நெல்வாய் பகுதியை சேர்ந்தவர் ஏழுமலை மகன் கணேஷ். இவர் ஞாயிற்றுக்கிழமை தமிழக எல்லையோர ஆந்திர மாநில பகுதியான பூண்டி என்ற பகுதிக்கு சென்று பைக்கில் வீடு திரும்பிக் கொண்டிருந்தார்.அப்போது சென்னை கொல்கத்தா தேசிய நெடுஞ்சாலையில் எளாவூர் அருகே சாலையோரம் நிறுத்தப்பட்டிருந்த லாரி மீது கணேஷ் ஓட்டி வந்த பைக் மோதியது. இந்த விபத்தில் கணேஷ் படுகாயமடைந்து சம்பவ இடத்திலேயே பலியானார்.

விபத்து குறித்து அறிந்த ஆரம்பாக்கம் போலீஸார் சம்பவ இடத்திற்கு விரைந்து விபத்தில் இறந்த கணேஷின் உடலை கைப்பற்றி பொன்னேரி அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பினர். சம்பவம் குறித்து இன்ஸ்பெக்டர் ரவி விசாரணை நடத்தி வருகின்றார்.

முழு கட்டுரையைப் படிக்க →