முகப்பு
தற்போதைய செய்திகள்

பழனி அருகே கிணற்றுக்கு வைக்கப்பட்ட வெடியில் பாறை சிதறி இருபெண்கள் காயம்

பழனி அருகே புதுஆயக்குடியில் இருந்து சித்தன்மலை செல்லும் வழியில் ஏராளமான விளைநிலங்கள் உள்ளது.  தற்போது நிலவி வரும் கோடையால் விளைநிலங்களில் உள்ள கிணறுகள் தண்ணீரின்றி வறண்டு

Updated On : 5 ஜனவரி, 2024 at 5:18 AM
பகிர்:

பழனி அருகே கிணற்றுக்கு வைக்கப்பட்ட வெடியால் பாறைகள் சிதறி விழுந்து இருபெண்கள் காயமடைந்தனர்.  வீடு சேதமடைந்தது.

பழனி அருகே புதுஆயக்குடியில் இருந்து சித்தன்மலை செல்லும் வழியில் ஏராளமான விளைநிலங்கள் உள்ளது.  தற்போது நிலவி வரும் கோடையால் விளைநிலங்களில் உள்ள கிணறுகள் தண்ணீரின்றி வறண்டு வருகிறது.  இப்பகுதியில் உள்ள ஒரு பகுதி வயலின் உரிமையாளர்கள் கருப்புச்சாமி(55). இவர் தனக்கு தங்களுக்கு பாத்தியப்பட்ட கிணற்றை தூர்வாற ஏற்பாடு முடிவு செய்து வேலம்பட்டியை சேர்ந்த கண்டிமுத்து மகன் ஆனந்தராஜ்(52), பொன்னாபுரம் முத்துச்சாமி மகன் ராஜவேல்(39). ஆகியோர் உதவியோடு சனிக்கிழமை கிணற்றை தூர்வாரும் பணி மேற்கொண்டுள்ளார்.

இதற்காக கிணற்றில் இருந்த பாறைக்கு வேட்டு வைத்துள்ளனர். இதில் கிணற்றில் இருந்த பாறைகள் சிதறி வெளியே வந்து பலமீட்டர் தூரத்துக்கு சிதறியுள்ளது. இதில் பாறைகள் பேருந்துக்காக நின்றிருந்த மானூர் தெற்கு தெருவை சேர்ந்த ரபீக்அகமது என்பவர் மனைவி ஜென்னத்துல் பிர்தௌஸ்(28) மீதும், வீட்டில் சமையல் வேலை செய்து கொண்டிருந்த சேக் அப்துல்லா மனைவி ஆரிபாபேகம்(32) மீதும் விழுந்து இருவரும் பலத்த காயமடைந்தனர்.  ஆரிபா பேகத்தின் வீட்டின் மேற்கூரையே உடைத்து விழுந்த கற்களால் வீட்டில் இருந்த மிக்சி போன்ற பொருட்களும் சேதமடைந்தது.

இதுகுறித்து ஆயக்குடி போலீஸார் வழக்குப் பதிவு மூன்று பேரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.  

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.