முகப்பு
தற்போதைய செய்திகள்

அனுமதியின்றி வெடிபொருள்: இருவர் கைது

கொட்டாம்பட்டி அருகே உள்ள கருங்காலக்குடியில் பாறைகான்ட்ராக்டர் செல்வராஜ் ஒருபையில் வெடிபொருள்களை எடுத்துச் சென்றபோது போலீஸôர் அவரை நிறுத்தி சோதனையிட்டனர். அவரிடமிருந்து 6

Updated On : 5 ஜனவரி, 2024 at 5:19 AM
பகிர்:

மதுரை மாவட்டம் கொட்டாம்பட்டி அருகே அனுமதியின்றி வெடிபொருள்கள் வைத்திருந்ததாக இருவரை கொட்டாம்பட்டி போலீஸôர் செவ்வாய்க்கிழமை கைதுசெய்தனர்.

கொட்டாம்பட்டி அருகே உள்ள கருங்காலக்குடியில் பாறைகான்ட்ராக்டர் செல்வராஜ் ஒருபையில் வெடிபொருள்களை எடுத்துச் சென்றபோது போலீஸôர் அவரை நிறுத்தி சோதனையிட்டனர். அவரிடமிருந்து 6 டெட்டோனேட்டர்கள் வெடித்திரி ஆகியவற்றைக் கைப்பற்றினர். அவரிடம் போலீஸôர் விசாரித்தபோது ஓட்டக்கோவில்பட்டியைû சேர்ந்த மஞ்சுநாதன் மனைவி லெட்சுமியிடம் இருந்து வாங்கிவருவதாகவும், உடைகல் உடைக்க கொண்டுசெல்வதாகவும் போலீஸôரிடம் கூறினாராம்.

போலீஸôர் லெட்சுமி வீட்டில் சோதனையிட்டு 23 ஜெல், 19 ஜெலட்டின், வெடிஉப்பு, வெடித்திரி உள்ளிட்ட பொருள்களைக் கைப்பற்றினர். செல்வராஜ், லெட்சுமி இருவரையும் கைதுசெய்த கொட்டாம்பட்டி போலீஸார் மேலும் விசாரித்து வருகின்றனர்.

முழு கட்டுரையைப் படிக்க →