முகப்பு
தற்போதைய செய்திகள்

தேனீக்கள் கொட்டியதில் 30 பேர் படுகாயம்

வேலூர் மாவட்டம், வாணியம்பாடி அடுத்த சின்னவேப்பம்பட்டு பகுதியை சேர்ந்தவர் உதயகுமார்(45) விவசாயி. இவரது 15 வயது மகள் உமையாதேவி என்பவர் கடந்த 10 நாட்களுக்கு முன்பு உடல்நிலைகுறைவால்

தற்போதைய செய்திகள்

தேனீக்கள் கொட்டியதில் 30 பேர் படுகாயம்

வேலூர் மாவட்டம், வாணியம்பாடி அடுத்த சின்னவேப்பம்பட்டு பகுதியை சேர்ந்தவர் உதயகுமார்(45) விவசாயி. இவரது 15 வயது மகள் உமையாதேவி என்பவர் கடந்த 10 நாட்களுக்கு முன்பு உடல்நிலைகுறைவால்

Updated On : 5 ஜனவரி, 2024 at 5:22 AM
பகிர்:

வேலூர் மாவட்டம், வாணியம்பாடி அடுத்த சின்னவேப்பம்பட்டு பகுதியை சேர்ந்தவர் உதயகுமார்(45) விவசாயி. இவரது 15 வயது மகள் உமையாதேவி என்பவர் கடந்த 10 நாட்களுக்கு முன்பு உடல்நிலைகுறைவால் இறந்துவிட்டார். இவரது இறுதிச்சடங்கு நிகழ்ச்சி உதயகுமாருக்கு சொந்தமான நிலத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. நிகழ்ச்சயில் உறவினர்கள் மற்றும் ஊர்பொதுமக்கள் என 50க்கும மேற்பட்டோர் கலந்துக் கொண்டனர். நிகழ்ச்சியின் போது கற்பூரம் மற்றும் சாம்பிராணி ஏற்றினர். இவற்றால் எழுந்த புகையால் மரத்தின் மேல் கட்டியிருந்த மிகப்பெரிய தேன் கூட்டிலிருந்த மலைத்தேனீக்கள் கலைந்தன. மேலும் திடீரென அங்கிருந்தவர்களை கொட்டி தாக்க துவங்கியது.

இதில் 30 பேர் படுகாயமடைந்தனர். இவர்கள் அனைவரும் வாணியம்பாடி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. அதில் 10 பேர் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். மற்றவர்கள் சிகிச்சை பெற்று வீடு திரும்பினர்.

முழு கட்டுரையைப் படிக்க →