சிதம்பரம் தில்லைக்காளியம்மன் கோயில் தேரோட்டம்
கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் வீற்றுள்ள தில்லைக்காளியம்மன் கோயிலில் வைகாசி திருவிழா மே.20-ம் தேதி காப்புக் கட்டுதல் நிகழ்ச்சியுடன் தொடங்கியது. தினமும் சுவாமி வீதிஉலா நிகழ்ச்சி நடைபெற்றது. மே.27-ம்
பிரசித்தி பெற்ற சிதம்பரம் தில்லைக்காளியம்மன் கோயில் தேரோட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. திரளான பக்தர்கள் பங்கேற்று தரிசித்தனர்.
கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் வீற்றுள்ள தில்லைக்காளியம்மன் கோயிலில் வைகாசி திருவிழா மே.20-ம் தேதி காப்புக் கட்டுதல் நிகழ்ச்சியுடன் தொடங்கியது. தினமும் சுவாமி வீதிஉலா நிகழ்ச்சி நடைபெற்றது. மே.27-ம் தேதி செவ்வாய்க்கிழமை தேர்திருவிழா வெகு சிறப்பாக நடைபெற்றது. உற்சவ மூர்த்தியான தில்லை அம்மன் கோயிலிருந்து புறப்பட்டு, வடக்குசன்னதி எதிரே உள்ள தேரில் ஏறி புறப்பட்டார். பின்னர் தேர் நான்குவீதிகள் வலம் வந்து மீண்டும் வடக்குசன்னதி நிலையை அடைந்ததது. அங்கு தேரிலிருந்து இறங்கி கோயிலுக்கு புறப்பட்டு சென்றார். தேர் திருவிழாவில் திரளான பக்தர்கள் பங்கேற்று தரிசித்தனர்.
மே 28-ம் தேதி சிவப்பிரியையில் தீர்த்தவாரியும், இரவு காப்பு களைதல் நிகழ்ச்சியும், 29-ம் தேதி மஞ்சநீர் விளையாட்டு நிகழ்ச்சியும், முத்துப்பல்லக்கு நிகழ்ச்சியும், 30-ம் தேதி தெப்ப உற்சவமும், 31-ம் தேதி திருஊஞசல் நிகழ்ச்சியுடன் திருவிழா முடிவடைகிறது. திருவிழா ஏற்பாடுகளை இந்து அறநிலையத்துறை உதவிஆணையர் சி.ஜோதி, செயல்அலுவர் க.முருகன் ஆகியோர் செய்திருந்தனர்.
ஸ்ரீநடராஜப் பெருமானுக்கும், ஸ்ரீபார்வதிக்கு ஏற்பட்ட நடனப்போட்டியில், நடராஜப் பெருமான் ஊர்தவ தாண்டவத்தை ஆட முடியாமல் ஸ்ரீபார்வதி வெகுண்டு சிதம்பரம் வடதிசை எல்லையில் ஸ்ரீஎல்லைக்காளி எனும் தில்லைக்காளியாக வீற்றுள்ளார் என வரலாறு கூறுகிறது. ஸ்ரீபிரம்மன், ஸ்ரீதேவியை பூஜிக்க, ஸ்ரீபார்வதி பிரம்மனின் பூஜைக்கு மனமுவந்து சினம் தணிந்து உலக உயிர்களுக்கு அனுக்கிரகம் செய்யும் நோக்கத்துடன் கோயில் ஸ்ரீபிரம்ம சாமுண்டீஸ்வரி ஸ்ரீதில்லையம்மன் என்ற திருப்பெயருடனும் இக்கோயிலில் வீற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.