வறட்சி பாதித்த மாநிலமாக அறிவிக்க கோரி விவசாய சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
தமிழகத்தை வறட்சி பாதித்த மாவட்டமாக அறிவிக்கக் கோரி சிதம்பரம் அருகே புவனகிரி, கீரப்பாளையம் ஊராட்சி ஒன்றிய அலுவலகங்கள் முன்பு விவசாயிகள் சங்கம் மற்றும் விவசாயத் தொழிலாளர் சங்கத்தினர்
தமிழகத்தை வறட்சி பாதித்த மாவட்டமாக அறிவிக்கக் கோரி சிதம்பரம் அருகே புவனகிரி, கீரப்பாளையம் ஊராட்சி ஒன்றிய அலுவலகங்கள் முன்பு விவசாயிகள் சங்கம் மற்றும் விவசாயத் தொழிலாளர் சங்கத்தினர் செவ்வாய்க்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
அகில இந்திய விவசாய தொழிலாளர்கள் சங்கம். தமிழ் மாநில விவசாய தொழிலாளர்கள் சங்கம் சார்பில் தமிழகத்தை வறட்சி பாதித்த மாநிலமாக அறிவிக்க கோரியும். வறட்சி பாதித்த மாநிலங்களுக்கு 100 நாள் வேலையை 150 நாட்களாக உயர்த்தி வழங்க கோரியும், மாவட்டத்தில் அனைத்து மட்டத்திலும் நடைபெறும் அனைத்து ஊழல்களையும் தடுத்து நிறுத்த வலியுறுத்தி உள்ளிட்ட ஒன்பது கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
புவனகிரி ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு நடைபெற்ற ஆர்பாட்டத்திற்கு விவசாயத் தொழிலாளர் சங்க ஒன்றியத் தலைவர் கோவிந்தராசு, வட்டச் செயலாளர்இளையபெருமாள் ஆகியோர் தலைமை வகித்தனர். மாவட்டச் செயலாளர் தண்டபாணி, மாவட்டத் தலைவர் நாகராஜன் உள்ளிட்டோர் பங்கேற்று கோரிக்கைகளை விளக்கிப் பேசினர்
கீரைப்பாளையம் ஊராட்சி ஒன்றிய அலவலகம் முன்பு நடைபெற்ற ஆர்பாட்டத்திற்கு விவசாய தொழிலாளர் சங்க ஒன்றியத் தலைவர் சுப்ரமனியன், மாவட்டக்குழுஉறுப்பினர் அன்பழகன் ஆகியோர் தலைமை வகித்தனர். தமிழநாடு தீண்டாமை ஒழிப்பு பிரிவு மாவட்டச் செயலாளர் பி.வாஞ்சிநாதன், விவசாய சங்க மாவட்டத் தலைவர் சேகர் உள்ளிட்டோர் பங்கேற்று பேசினர்.