தற்போதைய செய்திகள்

திருச்செந்தூர் கடலில் கிடந்த 2 யானை தந்தங்கள் மீட்பு

திருச்செந்தூர் கோவில் கடலில் கிடந்த 2 யானை தந்தங்களை சிப்பி அரிக்கும் தொழிலாளிகள் மீட்டு காவல்துறையினரிடம் ஒப்படைத்தனர்.

முழுமதி மணியன்

திருச்செந்தூர் கோவில் கடலில் கிடந்த 2 யானை தந்தங்களை சிப்பி அரிக்கும் தொழிலாளிகள் மீட்டு காவல்துறையினரிடம் ஒப்படைத்தனர்.

திருச்செந்தூர் வடக்குமாரியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் முனீஸ்வரன் (35). கடலில் சிப்பி அரிக்கும் தொழிலாளியான இவர் தனது நண்பர்களான அதே தெருவைச் சேர்ந்த சிவராஜா மற்றும் மணி ஆகியோருடன்

புதன்கிழமையன்று பகலில் கடலில் சிப்பி அரிக்கும் தொழிலில் ஈடுபட்டிருந்தார். அப்போது கடலில் சுமார் ஒன்றரை உயரம் கொண்ட இரண்டு யானை தந்தங்கள் கிடைத்துள்ளது. அதனை மீட்ட அவர்கள் திருச்செந்தூர் கோவில் காவல்நிலையத்தில் ஒப்படைத்தனர். இது குறித்து காவலர் பாலகிருஷ்ணன் வழக்குப்பதிந்து காவல் ஆய்வாளர் இந்திரா விசாரித்து வருகின்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தில்லியில் கட்டுப்பாடு அமலுக்குப் பிறகும் நீடிக்கும் காற்று மாசு!

தஞ்சையில் ஜன.5-இல் அமமுக பொதுக் குழு

ஆந்திரத்தில் இருந்து கடத்தி வரப்பட்ட 10 மூட்டை போதைப் பாக்கு பறிமுதல்

திருவண்ணாமலை மாவட்டத்தில் முதல்வா் சுற்றுப்பயணம்: சிறப்பான வரவேற்பு அளிக்க ஏற்பாடு

திருச்சானூா் கோயிலுக்கு பணம் எண்ணும் இயந்திரம் நன்கொடை

SCROLL FOR NEXT