வங்கியிலிருந்து எடுத்து வரப்பட்ட பணம் நூதன முறையில் திருட்டு
காட்டுமன்னார்கோயில் அருகே உள்ள மானியம் ஆடூரைச் சேர்ந்தவர் முகமதுஉசேன். இவர் தனது நண்பர் முகமதுமன்சூருடன் (51) வியாழக்கிழமை காட்டுமன்னார்கோயில் இந்தியவன் வங்கியில் பணம் எடுக்க காரில்
காட்டுமன்னார்கோயிலில் வங்கியிலிருந்து எடுத்து வரப்பட்ட ரூ.1 லட்சத்து 10 ஆயிரம் பணம் நூதன முறையில் திருடுபோனது.
காட்டுமன்னார்கோயில் அருகே உள்ள மானியம் ஆடூரைச் சேர்ந்தவர் முகமதுஉசேன். இவர் தனது நண்பர் முகமதுமன்சூருடன் (51) வியாழக்கிழமை காட்டுமன்னார்கோயில் இந்தியவன் வங்கியில் பணம் எடுக்க காரில் வந்தனர். பின்னர் பணத்தை எடுத்து வந்து கார் முன்புறம் உள்ள டேஷ்போர்டில் வைத்துவிட்டு முகமது உசேன் காரை ஓட்டிக்கொண்டு புறப்பட்டார். அப்போது ரெட்டியார் ரோட்டில் முகமது உசேன் காரை நிறுத்திவிட்டு மளிகை கடைக்கு சென்றார். அப்போது 60 வயது முதியவர் காரின் முன் இருக்கையில் அமர்ந்திருந்த முகமது மன்சூரிடம், கார் டிரைவர் பக்கம் ரூபாய் நோட்டுகள் கீழே கிடப்பதாக தெரிவித்துள்ளார். நண்பர் முகமதுஉசேன் பணத்தை கீழே போட்டுவிட்டார் என நினைத்துக் கொண்டு, மன்சூர் சென்று பார்க்கச் சென்றார். அப்போது முதியவர் காரில் டேஷ்போர்ட்டில் உருந்த ரூ.1 லட்சத்து 10 ஆயிரம் பணத்தை எடுத்துக் கொண்டு அருகில் நின்று கொண்டிருந்த வாலிபரின் மோட்டார் சைக்கிளில் ஏறி தலைமறைவானார்.
இதுகுறித்து புகாரின் பேரில் காட்டுமன்னார்கோயில் போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.