ஸ்ரீவிலி.யில் கன மழை: ஆக்கிரமிப்பால் நீர் தேங்கி மக்கள் பாதிப்பு
விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூரில் சனிக்கிழமை இரவு பெய்த கன மழைக்கு, நகரில் ஏற்பட்டுள்ள ஆக்கிரமிப்புகளால் மழைநீர் குடியிருப்பு பகுதிகளில் தேங்கியுள்ளது. இதனால் பொதுமக்கள் பெரும் அவதிக்குள்ளாகியுள்ளனர்.
தற்போதைய செய்திகள்ஸ்ரீவிலி.யில் கன மழை: ஆக்கிரமிப்பால் நீர் தேங்கி மக்கள் பாதிப்பு
விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூரில் சனிக்கிழமை இரவு பெய்த கன மழைக்கு, நகரில் ஏற்பட்டுள்ள ஆக்கிரமிப்புகளால் மழைநீர் குடியிருப்பு பகுதிகளில் தேங்கியுள்ளது. இதனால் பொதுமக்கள் பெரும் அவதிக்குள்ளாகியுள்ளனர்.
விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூரில் சனிக்கிழமை இரவு பெய்த கன மழைக்கு, நகரில் ஏற்பட்டுள்ள ஆக்கிரமிப்புகளால் மழைநீர் குடியிருப்பு பகுதிகளில் தேங்கியுள்ளது. இதனால் பொதுமக்கள் பெரும் அவதிக்குள்ளாகியுள்ளனர்.
ஸ்ரீவில்லிபுத்தூர் பகுதியில் கடந்த 4 ஆண்டுகளுக்கு மேலாக மழை இல்லாமல் பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்குள்ளாகிருந்தனர். கடந்த சில நாட்களாக மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் மழை பெய்து குளங்கள், கண்மாய்கள் நிரம்பி வந்த நிலையில் ஸ்ரீவில்லிபுத்தூரில் சாரல் மழையே பெய்து வந்தது.
இந்நிலையில் சனிக்கிழமை இரவு சுமார் 3 மணி நேரம் கனமழை பெய்தது. இந்த மழைக்கு நகரில் பல்வேறு பகுதிகளில், கழிவு நீர் செல்லும் பாதைகள் மற்றும் கண்மாய்க்கு நீர் செல்லும் பாதைகள் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளதால் மழை நீர் தேங்கி பொதுமக்கள் பெரும் அவதிக்குள்ளாகியுள்ளனர்.
ஞாயிற்றுக்கிழமை ஸ்ரீவில்லிபுத்தூர் தொகுதி சட்டப் பேரவை உறுப்பினர் வெ.பொன்னுப்பாண்டியன், வட்டாட்சியர் சாந்தா, நகராட்சி ஆணையாளர் பழனிவேல் உள்ளிட்டோர் மழை நீர் தேங்கியுள்ள பகுதிகளுக்குச் சென்று பார்வையிட்டனர்.
நகராட்சி 2-வது வார்டுக்குட்பட்ட பட்டத்தரசியம்மன்கோவிலுக்குச் செல்லும் பாதையில் மழை நீர் தேங்கியதால், கோவிலுக்குச் செல்லும் பக்தர்கள், இப் பகுதியில் குடியிருப்போர் மற்றும் மங்காபுரம் பகுதிக்குச் செல்வோர் மிகுந்த சிரமத்திற்குள்ளாகினர். இதனை பார்வையிட்ட பொன்னுப்பாண்டியன் எம்.எல்.ஏ., இந்த தேங்குயுள்ள மழை நீர், கண்மாய்க்குச் செல்லும் பாதையை இங்குள்ள தனியார் மருத்துவமனையினர் ஆக்கிரமித்து அடைத்துவிட்டதால் மழை நீர் தேங்கியுள்ளது. இந்த ஆக்கிரமிப்பை உடனடியாக அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்க மாவட்ட நிர்வாகத்திடமும் நகராட்சி நிர்வாகத்திடமும் வலியுறுத்தயுள்ளதாய் கூறினார்.
அப்போது அவருடன் தென்காசி மக்களவைத் தொகுதி முன்னாள் உறுப்பினர் பொ.லிங்கம், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளர் தி.ராமசாமி உள்ளிட்டோர் உடனிருந்தனர். ஸ்ரீவில்லிபுத்தூரில் ஞாயிற்றுக்கிழமை காலை 8 மணியுடன் நிறைவடைந்த 24 மணி நேரத்தில் 130 மி.மீ. மழையும், பிளவக்கல் அணைப் பகுதியில் 38 மி.மீ. மழையும், கோவிலார் அணைப் பகுதியில் 65 மி.மீ. மழையும் பெய்துள்ளது.
அணைகள் நிரம்பின: ஸ்ரீவில்லிபுத்தூர் தாலுகாவில் உள்ள பிளவக்கல் அணையின் மொத்த கொள்ளளவு 44 அடி. தற்போது அணையில் 41 அடி நீர் உள்ளது. கோவிலார் அணையில் மொத்த கொள்ளளவு 30 அடி. தற்போது 28 அடி தண்ணீர் உள்ளது.