ஸ்ரீவில்லிபுத்தூரில் திருமலை நாயக்கர் உருவ சிலை அமைக்க தீவிர ஏற்பாடு
வி்ருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூரில் மாமன்னர் திருமலை நாயக்கர் உருவ சிலை அமைக்க தீவிர ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருவதாய்,
தற்போதைய செய்திகள்ஸ்ரீவில்லிபுத்தூரில் திருமலை நாயக்கர் உருவ சிலை அமைக்க தீவிர ஏற்பாடு
வி்ருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூரில் மாமன்னர் திருமலை நாயக்கர் உருவ சிலை அமைக்க தீவிர ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருவதாய்,
வி்ருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூரில் மாமன்னர் திருமலை நாயக்கர் உருவ சிலை அமைக்க தீவிர ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருவதாய், மாமன்னர் திருமலை நாயக்கர்-வீரபாண்டிய கட்டபொம்மன் பண்பாடு மற்றும் அறக்கட்டளை பாதுகாப்புப் பேரவையின் தலைவர் வி.ராதாகிருஷ்ணன் செய்தியாளர்களிடம் கூறினார்.
சனிக்கிழமை செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறியதாவது:
மாமன்னர் திருமலை நாயக்கர், மதுரையைப் போன்று ஸ்ரீவில்லிபுத்தூரில் நான்கு மாட வீதிகளை ஏற்படுதியவர். மேலும் தமிழக அரசின் முத்திரைச் சின்னமாக திகழும் 196 அடி உயர ஆண்டாள் கோவில் ராஜகோபுரத்தை என்றும் சிதையாமல் இருக்கும் வகையில் வச்சிரக் காரை பூசி கட்டியவர். மேலும் கோவிலின் பெரும் பகுதியைக் கட்டியவர் இவரே.ஸ்ரீவில்லிபுத்தூரில் இத்தாலிய நாட்டு கட்டட வல்லுநர்களைக் கொண்டு, ஒப்பற்ற அரண்மனையைக் கட்டி, நிர்வாகம் செய்தும், பல சாலைகள், தரும சத்திரங்களையும் இங்கு அமைத்து ஸ்ரீவில்லிபுத்தூருக்கு பெருமை சேர்த்தவர் இவர். இவருக்கு நன்றிக் கடன் செய்யும் பொருட்டு ஸ்ரீவில்லிபுத்தூர் நான்கு ரத வீதிகளில் ஏதாவது ஒரு இடத்தில் மாமன்னருக்கு சிலை நிறுவ தீவிர முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
நகருக்கு மேலும் பெருமை சேர்க்கும் வகையில் நான்கு ரத வீதிகளில் மாமன்னருக்கு சிலை அமைக்க, அவர் மீது பற்றுள்ளவர்கள் தங்களிடம் உள்ள சிறிய இடத்தை கொடுத்து உதவலாம். சிலை அமைக்க அரசு மற்றும் இந்து சமய அறநிலையத் துறையிடம் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. இது அரசின் பரிசீலனையில் உள்ளதாய் அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து மேலும் விவரங்களுக்கு 98424-29149 என்ற செல்போன் எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என்றார் அவர்.