மதுராந்தகம் அருகே அடையாளம் தெரியாத வாகனம் மோதி கூலித்தொழிலாளி பலி
மதுராந்தகம் அடுத்த கருங்குழி மேலவலம்பேட்டையைச் சேர்ந்தவர் பெருமாள். அவரது மகன் பிரபு (வயது 35). இவர் கட்டிடசென்டரிங் வேலை செய்யும் கூலிதொழிலாளி. மதுராந்தக்தில் தனது வேலையை முடித்துவிட்டு,
மதுராந்தகம் வடக்கு பைபைஸ் சாலையில் அடையாளம் தெரியாத வாகனம் மோதி, மோட்டார் சைக்கிளில் சென்ற கூலித்தொழிலாளி, பலியான சம்பவம் சனிக்கிழமை நள்ளிரவு நடைபெற்றது.
மதுராந்தகம் அடுத்த கருங்குழி மேலவலம்பேட்டையைச் சேர்ந்தவர் பெருமாள். அவரது மகன் பிரபு (வயது 35). இவர் கட்டிடசென்டரிங் வேலை செய்யும் கூலிதொழிலாளி. மதுராந்தக்தில் தனது வேலையை முடித்துவிட்டு, சனிக்கிழமை நள்ளிரவு தனது மோட்டார் சைக்கிளில், தனது வீட்டுக்கு சென்றுக் கொண்டிருந்தார். திண்டிவனத்தில் இருந்து சென்னை நோக்கி வந்த அடையாளம் தெரியாத வாகனம் பிரபு சென்ற மோட்டார் சைக்கிளின் மீது, மோதிய விபத்தில் சம்பவ இடத்திலேயே அவர் இறந்து போனார்.
இது குறித்து மதுராந்தகம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறார்.
Advertisement