முகப்பு
தற்போதைய செய்திகள்

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே மயான பாதை பிரச்னை: 3 மணி நேரம் சடலத்துடன் மறியல்

விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே மயான பாதை பிரச்னை தொடர்பாக ஒரு தரப்பினர் மயானத்திற்குச் செல்லும் பாதையை தங்களுக்குரியது என்று உரிமை கொண்டாடி சடலத்தை கொண்டு செல்ல

தற்போதைய செய்திகள்

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே மயான பாதை பிரச்னை: 3 மணி நேரம் சடலத்துடன் மறியல்

விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே மயான பாதை பிரச்னை தொடர்பாக ஒரு தரப்பினர் மயானத்திற்குச் செல்லும் பாதையை தங்களுக்குரியது என்று உரிமை கொண்டாடி சடலத்தை கொண்டு செல்ல

Updated On : 5 ஜனவரி, 2024 at 7:21 AM
பகிர்:

விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே மயான பாதை பிரச்னை தொடர்பாக ஒரு தரப்பினர் மயானத்திற்குச் செல்லும் பாதையை தங்களுக்குரியது என்று உரிமை கொண்டாடி சடலத்தை கொண்டு செல்ல விடாமல் பிரச்னை செய்ததையடுத்து பாதிக்கப்பட்டுவர்கள் சடலத்துடன் 3 மணி நேரம் போராட்டத்தில் ஈடுபட்டனர். நீண்ட பேச்சு வார்த்தைக்குப் பின் சமரசம் ஏற்பட்டு சடலம் கொண்டு செல்லப்பட்டது.

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகேயுள்ள அத்திகுளத்தில் குறிப்பிட்ட ஒரு சமுதாயத்தினர், தங்களது மயானத்திற்கு ஆதிதிராவிடர் காலனி வழியேயுள்ள பொதுப்பாதை வழியே சடலத்தைக் ஆண்டாண்டு காலமாய் கொண்டு செல்வார்கள். கடந்த ஒரு மாதத்திற்கு முன்னர் ஒருவரது சடலத்தை இப் பாதை வழியே கொண்டு செல்ல முற்பட்டபோது, காலனி மக்கள் இந்த பொதுப் பாதை எங்களுக்குச் சொந்தமானது. இதன் வழியே சடலத்தைக் கொண்டு செல்லக் கூடாது என்று கூறி தகராறு செய்தனர். மேலும் பாதையில் சல்லி கொட்டப்பட்டு கிடந்தது. இவர்கள் சமுதாய வழக்கப்படி தள்ளுவண்டியில் தான் சடலத்தைக் கொண்டு செல்வார்கள். பின்னர் வருவாய்த்துறையினர் பேச்சு வார்த்தை நடத்தி ஒரு மாதத்திற்குள் தீர்வு காண்பதாகக் கூறினர். இதனையடுத்து அப்போது சடலத்தை தூக்கிக் கொண்டு சென்று இறுதிச் சடங்கு செய்துள்ளனர். ஆனால் பிரச்னைக்கு தீர்வு எட்டப்படாத நிலை இருந்தது.

இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமை இரவு மூக்கம்மாள் (70) என்ற மூதாட்டி இறந்துவிட்டார். இவரது சடலத்தை திங்கள்கிழமை குறிப்பிட்ட சமுதாயத்தினர் கொண்டு செல்ல முற்பட்டனர். ஆனால் மயானத்திற்கு காலனி வழியே செல்லும் பாதையில் ஊராட்சி ஒன்றியத்திலிருந்து சாலை அமைப்பதற்காக ஒரு மாதத்திற்கு முன்பு கொட்டப்பட்ட சல்லி பெரும் குவியலாக கிடந்தது. மேலும் காலனி வழியே சடலத்தை கொண்டு செல்வதற்கும் காலனி மக்கள் கடும் எதிர்ப்பும் தெரிவித்தனர். இதனையடுத்து பாதிக்கப்பட்டவர்கள் இறந்த பெண்ணின் சடலத்துடன் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனையடுத்து வட்டாட்சியர் அலுவலகத்தில் பேச்சு வார்த்தை நடைபெற்றது. அதில் இரு மாதத்தில் குறிப்பிட்ட பகுதியை அளந்து, பாதையை சீர் செய்து தருவதாய் கூறப்பட்டது. இதனையடுத்து ஊராட்சி ஒன்றியம் சார்பில் மயானத்திற்கு செல்லும் பொதுப்பாதையில் குவிக்கப்பட்டிருந்த சல்லி ஜே.சி.பி. இயந்திரம் மூலம் ஒதுக்கிவிடப்பட்டது. மூன்று மணி நேர போராட்டத்திற்குப் பின்னர் சடலத்தை பொதுப் பாதை வழியே கொண்டு சென்றனர்.

இதனால் இப் பகுதியில் பதற்றம் காணப்பட்டது. போலீஸார் தீவிர கண்காணிப்பு மற்றும் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

முழு கட்டுரையைப் படிக்க →