ஸ்ரீவில்லிபுத்தூரில் பகலில் அடுத்தடுத்து இரு வழிப்பறி: அச்சத்தில் மக்கள்
விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூரில் வியாழக்கிழமை மாலை இரு இடங்களில் ஜன நெருக்கடி மிகுந்த இடங்களில் பெண்களின் கழுத்தில் அணிந்திருந்த செயின்களை பறித்துச் சென்ற
தற்போதைய செய்திகள்ஸ்ரீவில்லிபுத்தூரில் பகலில் அடுத்தடுத்து இரு வழிப்பறி: அச்சத்தில் மக்கள்
விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூரில் வியாழக்கிழமை மாலை இரு இடங்களில் ஜன நெருக்கடி மிகுந்த இடங்களில் பெண்களின் கழுத்தில் அணிந்திருந்த செயின்களை பறித்துச் சென்ற
விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூரில் வியாழக்கிழமை மாலை இரு இடங்களில் ஜன நெருக்கடி மிகுந்த இடங்களில் பெண்களின் கழுத்தில் அணிந்திருந்த செயின்களை பறித்துச் சென்ற நபர்களை போலீஸார் தேடி வருகிறார்கள். மேலும் தோப்பில் இருந்த வீட்டின் பீரோவை உடைத்து அதிலிருந்த 14 பவுன் நகைகளைத் திருடிச் சென்றவர்களையும் போலீஸார் தேடி வருகிறார்கள்.
ஸ்ரீவில்லிபுத்தூர், ராமகிருஷ்ணாபுரம் வடக்குத் தெருவைச் சேர்ந்தவர் வேலாயுதம் மனைவி கந்தலீலா (62). இவர் மாலையில் தனது தெருவின் வழியே கடைக்குச் சென்றுவிட்டு திரும்பிக் கொண்டிருந்தார். அப்போது இரு சக்கர வாகனத்தில் வந்த நபர் அவர் கழுத்தில் அணிந்திருந்த 3 பவுன் செயினை பறித்துவிட்டு தப்பி ஓடிவிட்டார்.
இச் சம்பவம் நடைபெற்ற சற்று நேரத்தில் ஸ்ரீவில்லிபுத்தூர், தேரடிக்கு பின்புறம் உள்ள தெருவைச் சேர்ந்த மகேஸ்வரி (32), தனது தெருவில் சென்று கொண்டிருந்தபோது, இரு சக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர் அவர் அணிந்திருந்த முக்கால் பவுன் செயினை பறித்துக் கொண்டு தப்பி ஓடிவிட்டார். இந்த சம்பவங்கள் குறித்து ஸ்ரீவில்லிபுத்தூர் நகர் போலீஸார் விசாரித்து வருகிறார்கள்.
14 பவுன் செயின் திருட்டு:
கான்சாபுரத்தைச் சேர்ந்தவர் சின்னச்சாமி. இவருக்கு அத்திகோயில் அருகே தோப்பு உள்ளது. இங்கு வீடு அமைத்து அங்கு குடியிருந்து வருகிறார். தோப்பில் யாரும் இல்லாத நேரத்தில் உள்ளே சென்ற மர்ம நபர், பீரோவில் இருந்த மஞ்சள் பையில் வைத்திருந்த சுமார் 14 பவுன் தங்க நகைகள், வெள்ளிப் பொருட்களை பையுடன் தூக்கிச் சென்றுவிட்டார்களாம். பொருட்களை எடுத்துவிட்டு, பை சுமார் 2 கி.மீ. தூரத்தில் தனியே போட்டுவிட்டு மர்ம நபர்கள் சென்றுள்ளார். இது குறித்து கூமாப்பட்டி போலீஸார் விசாரித்து வருகிறார்கள்.
ஸ்ரீவில்லிபுத்தூர், பட்டத்தரசியம்மன்கோவில் அருகே உள்ள ஒரு வீட்டில் செவ்வாய்கிழமை இரவு 16 வயது மதிக்கத் தக்க நபர் உள்ளே குதித்து, திருட முயன்றுள்ளார். இவருடன் வந்த 40 வயது மதிக்கத் தக்க நபர் வெளியே நின்று கொண்டிருந்துள்ளார். வீட்டில் இருந்தவர்கள் உள்ளே இறங்கிய நபரை பிடித்து நகர் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். ஆனால் இவர் மீதும் போலீஸார் எந்த நடவடிக்கையோ எடுத்ததாகத் தெரியவில்லை.
ஸ்ரீவில்லிபுத்தூர் பகுதியில் தொடர் திருட்டுச் சம்பவங்கள், வழிப்பறி, வீடு புகுந்து கொள்ளை நடைபெற்று வருவது பொதுமக்கள் மத்தியில் பெரும் அச்சத்தை ஏற்படு்த்தியுள்ளது. இது குறித்து பொதுமக்கள் கூறுகையில் போலீஸார் எந்தவித ரோந்துப் பணியிலும் இரவிலும், முக்கியமாக காலை மாலை நேரங்களில் ஜன நெரு்ககடி மிகுந்த இடங்களில் ரோந்து மற்றும் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுவதில்லை என்று கூறுகிறார்கள்.