விபத்தில் நிரந்தர ஊனமுற்ற இளைஞருக்கு ரூ.16.19 லட்சம் இழப்பீடு வழங்க ஆணை
விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூரில் விபத்தில் நிரந்தர ஊனமுற்ற இளைஞருக்கு ஸ்ரீவில்லிபுத்தூர் நீதிமன்றத்தில்...
தற்போதைய செய்திகள்விபத்தில் நிரந்தர ஊனமுற்ற இளைஞருக்கு ரூ.16.19 லட்சம் இழப்பீடு வழங்க ஆணை
விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூரில் விபத்தில் நிரந்தர ஊனமுற்ற இளைஞருக்கு ஸ்ரீவில்லிபுத்தூர் நீதிமன்றத்தில்...
விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூரில் விபத்தில் நிரந்தர ஊனமுற்ற இளைஞருக்கு ஸ்ரீவில்லிபுத்தூர் நீதிமன்றத்தில், காப்பீட்டு நிறுவனம் ரூ.16,19,240 இழப்பீடு வழங்க வெள்ளிக்கிழமை உத்தரவிட்டது.
ஸ்ரீவில்லிபுத்தூர், ஊரணிபட்டி தெருவைச் சேர்ந்தவர் அருமைராஜ் மகன் சரவணன் ஆறுமுகம் (30). இவருக்கு திருமணம் நடைபெற்று ஒரு குழந்தை உண்டு. இவர் சிவகாசியில் உள்ள தனியார் பேப்பர் கம்பெனியில் வேலை செய்து வந்தார்.
ஜன.,9, 2004-ம் தேதி உடன் வேலை செய்யும் கணேசன் என்பவரின் இரு சக்கர வாகனத்தில் பின்னால் உட்கார்ந்து சரவணன் ஆறுமுகம், வேலை விஷயமாக கோவில்பட்டிக்குச் சென்று கொண்டிருந்தார். சாத்தூர் புறவழிச்சாலையில் சென்று கொண்டிருந்தபோது, எதிரே முருகன் என்பவர் ஓட்டி வந்த இரு சக்கர வாகனம் இவர்கள் வாகனத்தின் மீது மோதியது. இதில் பலத்த காயமுற்ற சரவணன் ஆறுமுகம், மதுரை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இவருக்கு இடுப்புக் கீழ் முழுவதுமாக செயல் இழந்து முழு ஊனம் அடைந்தார்.
இதனையடுத்து தனக்கு இழப்பீடு கோரி, சரவணன் ஆறுமுகம் ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள சார்பு நீதிமன்றம் மற்றும் மோட்டார் வாகன விபத்துக்கள் இழப்பீடு கோருரிமை தீர்ப்பாயத்தில் மனு தாக்கல் செய்தார். மனுவை விசாரித்த நீதிபதி எஸ்.கோவிந்தராஜன், சென்னை, காதர்நவாஷ்கன் சாலையில் உள்ள ராயல் சுந்தரம் அலையன்ஸ் இன்சூரன்ஸ் நிறுவனம், சரவணன் ஆறுமுகத்திற்கு ரூ.16,19,240 இழப்பீடு வழங்க உத்தரவிட்டார்.