பழனியில் பேத்தி கடத்தப்பட்டதாக தாத்தா புகார்
பழனியில் பேத்தி கடத்தப்பட்டதாக தாத்தா புகார் செய்துள்ளார். பழனி சிறப்புக்காவல்படை அருகே உள்ள பாண்டியன் நகரை சேர்ந்தவர் கிருஷ்ணசாமி(65). இவரது பேத்தி மணிமேகலை இவரது வளர்ப்பில் உள்ளார்.
பழனியில் பேத்தி கடத்தப்பட்டதாக தாத்தா புகார் செய்துள்ளார். பழனி சிறப்புக்காவல்படை அருகே உள்ள பாண்டியன் நகரை சேர்ந்தவர் கிருஷ்ணசாமி(65). இவரது பேத்தி மணிமேகலை இவரது வளர்ப்பில் உள்ளார்.
மணிமேகலை பழனி அரசினர் மகளிர் மேல்நிலைப் பள்ளியில் பனிரெண்டாம் வகுப்பு பயின்று வருகிறார். சனிக்கிழமை கணினி வகுப்புக்கு சென்று வருவதாக கூறி சென்ற மணிமேகலை வீடு திரும்பவில்லை. பல இடங்களிலும் அவரை தேடி கிடைக்காத நிலையில் அக்கம்பக்கம் விசாரித்த போது மஞ்சநாயக்கன்பட்டியை அடுத்த மாட்டுப்பாதை தோட்டத்துசாலையை சேர்ந்த பெருமாள் மகன் ஆதீஸ்வரன்(26) என்பவர் பேத்தியை ஆசைவார்த்தை கூறி கடத்தி சென்றது தெரியவந்தது.
இதுகுறித்து பழனி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் கிருஷ்ணசாமி கொடுத்த புகாரின் பேரில் ஆதீஸ்வரன் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.