வீட்டை காலிசெய்ய மறுத்து பெற்றோரை தாக்கிய மகன்
பழனியருகே வீட்டை காலி செய்ய மறுத்து பெற்றோரை தாக்கிய மகன் கைது செய்யப்பட்டார்.
பழனியருகே வீட்டை காலி செய்ய மறுத்து பெற்றோரை தாக்கிய மகன் கைது செய்யப்பட்டார்.
பழனி அருகே தாமரைக்குளம் ஒன்றாவது வார்டை சேர்ந்தவர் மாரியப்பன்(65). இவரது மனைவி மாரியம்மாள்(50). இவர்கள் மகன் கன்னிமுத்து(28). மாரியப்பனும், மாரியம்மாளும் வசித்து வரும் வீட்டிற்கு எதிரே உள்ள வீட்டில் கன்னிமுத்து வசித்து வருகிறார்.
இருவீடும் மாரியப்பனுக்கு சொந்தமான நிலையில் கன்னிமுத்து வசிக்கும் வீட்டுக்கு தேவை இருந்ததால் அவரை காலி செய்யுமாறு தெரிவித்துள்ளார். பலமுறை சொல்லியும் காலி செய்யாத நிலையில் சனிக்கிழமை மாரியப்பனுக்கும், கன்னிமுத்துவுக்கும் வாய்த்தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது தந்தை, தாய் என்றும் பாராமல் கன்னிமுத்து அருகே இருந்த கம்பியால் இருவரையும் தாக்கியதில் இருவருக்கும் ரத்தக்காயம் ஏற்பட்டுள்ளது.
தொடர்ந்து வற்புறுத்தினால் கொலை செய்து விடுவேன் என்றும் தெரிவித்துள்ளார். இதையடுத்து பழனி தாலுகா காவல் நிலையத்தில் ஞாயிற்றுக்கிழமை மாரியப்பன் கொடுத்த புகாரின் பேரில் போலீஸார் வழக்குப் பதிவு செய்து கன்னிமுத்துவை கைது செய்தனர்.