தந்தைக்கு மாதம் ரூ.8 ஆயிரம் ஜீவனாம்சம் வழங்க இரு மகன்களுக்கு உத்தரவு
ஸ்ரீவில்லிபுத்தூரில் வசிக்கும் ஆதரவற்ற தந்தைக்கு மாதம் ரூ.8 ஆயிரம் ஜீவனாம்சம் வழங்க, ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள தலைமை குற்றவியல் நீதிமன்றம்
தற்போதைய செய்திகள்தந்தைக்கு மாதம் ரூ.8 ஆயிரம் ஜீவனாம்சம் வழங்க இரு மகன்களுக்கு உத்தரவு
ஸ்ரீவில்லிபுத்தூரில் வசிக்கும் ஆதரவற்ற தந்தைக்கு மாதம் ரூ.8 ஆயிரம் ஜீவனாம்சம் வழங்க, ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள தலைமை குற்றவியல் நீதிமன்றம்
ஸ்ரீவில்லிபுத்தூரில் வசிக்கும் ஆதரவற்ற தந்தைக்கு மாதம் ரூ.8 ஆயிரம் ஜீவனாம்சம் வழங்க, ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள தலைமை குற்றவியல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ஸ்ரீவில்லிபுத்தூர், பெருமாள்பட்டி-குலாளர் தெருவைச் சேர்ந்தவர் பெ.கோவிந்தசாமி (75). இவருக்கு கோ.சீனிவாசன் (45), கோ.கோவிந்தராஜ் (36), சோலையம்மாள் மற்றும் காளியம்மாள் ஆகிய பிள்ளைகள் உண்டு. பெண் பிள்ளைகள் திருமணம் முடித்து தனியே வசித்து வருகிறார்கள். சீனிவாசன் சொந்தமாக டிராக்டர், செங்கல்சூளை வைத்துள்ளார். கோவிந்தராஜ், செங்கல்சூளை மற்றும் விவசாயம் செய்து வருகிறார்.
2007-ம் ஆண்டு மனைவி இறந்த பின்னர் கோவிந்தசாமி தனியாக வசித்து வருகிறார். இவரது பூர்வீக சொத்து இரண்டரை ஏக்கரை புன்செய் நிலத்தை மகன்கள் இருவருக்கும் சமமாக பிரித்துக் கொடுத்துள்ளார். பாதைக்காக இருந்த 20 செண்ட் காலி நிலத்தை கோவிந்தசாமி வைத்திருந்துள்ளார். இந்த நிலத்தையும் மகன்கள் பறித்துக் கொண்டு, இவரை விரட்டி விட்டார்களாம். இந்த 20 செண்ட் நிலத்தை விற்கவும் முடியாமல், வாங்க வருபவர்களை மகன்கள் இருவரும் சேர்ந்து தடுத்து வருகிறார்களாம்.
கோவிந்தசாமி, தானே வீட்டில் சமைத்தும், பெண் மகள்கள் வீட்டில் ஏதாவது வாங்கி சாப்பிட்டும் வாழ்க்கையை கழித்து வருகிறார். வயது முதிர்வின் காரணமாக வேலைக்குச் செல்ல இயலாத கோவிந்தசாமி, அன்றாட தேவைகளைக்கூட பூர்த்தி செய்ய இயலாத நிலையில் உள்ளார். உடல்நிலை சரியில்லாமல் மருத்துச் செலவிற்கு பணம் இல்லாமலும், பராமரிக்க ஆள் இல்லாமலும் கஷ்டப்பட்டு வருகிறார்.
மேலும் சுய சம்பாத்தியத்தில் கட்டிய வீட்டை, மனைவி இறந்தவுடன், மூத்த மகன் சீனிவாசன் வாழ்நாள் முழுவதும் பராமரித்து உணவு, உடை மற்றும் தங்க ஒரு வீடு கொடுத்து பராமரிப்பார் என்று நம்பி கிரையம் செய்து கொடுத்துள்ளார். ஆனால் அவர் ஏமாற்றி, மோசடி செய்து கோவிந்தசாமியை தவிக்க விட்டுவிட்டாராம்.
அண்ணனின் செயல்பாடுகள் குறித்து தம்பி கோவிந்தராஜூடம் கூறியபோது, தனக்குத் தெரியாது, அண்ணன்தான் பார்க்க வேண்டும் என்று கூறிவிட்டாராம்.
இதனையடுத்து மகன் சீனிவாசனை நேரில் சந்தித்து தனது நிலை குறித்து கூறியபோது, தந்தையை ஆபாசமாகப் பேசி, வீட்டை விட்டுத் துரத்தி தந்தையின் பொருட்களை தூக்கி வீசிவிட்டாராம்.
இதனையடுத்து தனக்கு மகன்கள் ஜீவனாம்சமும், தங்க வீடு கட்டித் தர வேண்டும் என்று கோரி, கோவிந்தசாமி ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள தலைமை குற்றவியல் நீதிமன்றத்தில் 25.9.14-ம் தேதி மனு தாக்கல் செய்தார். மனுவை விசாரித்த நீதிபதி ஜான் ஆர்.டி. சந்தோஷம், மகன்கள் சீனிவாசன் மற்றும் கோவிந்தராஜ் ஆகியோர் தங்களது தந்தைக்கு மனு தாக்கல் செய்த தேதியிலிருந்து மாதம் ரூ.8 ஆயிரம் ஜீவனாம்சமாக வழங்க வேண்டும். இந்தத் தொகையை நீதிமன்றத்தில் ஒவ்வொரு ஆங்கில மாதமும் 10-ம் தேதிக்குள் கட்ட வேண்டும் என்றும் உத்தரவிட்டார்.