முகப்பு
தற்போதைய செய்திகள்

புலி நடமாட்டத்தை கண்காணிக்க வனத்துறைக்கு கோரிக்கை

பழனியை அடுத்த மேற்குமலைத் தொடர்ச்சி மலைப்பகுதியில் ஏராளமான வனவிலங்குகள் உள்ளன.  தற்போது வேட்டைத்தடுப்பு காவலர்களின் கண்காணிப்பால் வேட்டை பெருமளவு தடுக்கப்பட்டு

Updated On : 5 ஜனவரி, 2024 at 7:25 AM
பகிர்:

பழனி அருகே பொருந்தல் பகுதியில் புலி நடமாட்டத்தை கண்காணிக்கு வனத்துறைக்கு கிராமத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பழனியை அடுத்த மேற்குமலைத் தொடர்ச்சி மலைப்பகுதியில் ஏராளமான வனவிலங்குகள் உள்ளன.  தற்போது வேட்டைத்தடுப்பு காவலர்களின் கண்காணிப்பால் வேட்டை பெருமளவு தடுக்கப்பட்டு யானை, சிறுத்தை, மான், காட்டுமாடு போன்றவை எண்ணிக்கை அதிகரித்துள்ளது.  இந்நிலையில் கடந்த சிலதினம் முன்பு பொருந்தல் மலையடிவாரப் பகுதியில் ஆடுகள், நாய்கள் அடுத்தடுத்து காணாமல் போயுள்ளது.  தவிர பொருந்தல் ஜீரோபாயிண்ட்  பகுதிக்கு புலி ஒன்று வந்துள்ளதை கிராம மக்கள் கண்கூடாக கண்டுள்ளனர்.  முன்னரே கிராமமக்களின் அச்சுறுத்தலை கண்டு கொள்ளாத நிலையில் ஒற்றையானை சுற்றி வருகிறது.  புதன்கிழமை அதிகாலை புளியம்பட்டியில் தனியார் தோப்பு ஒன்றில் ஒரே ஒரு தென்னை மரத்தை யானை சாய்த்து சென்றுள்ளது.  அதே போல தற்போது வந்து செல்லும் புலியும் மக்களின் அச்சுறுத்தலை கண்டுகொள்வதாக தெரியவில்லை. 

கிராம மக்கள் தங்கள் வீடுகளின் ஆடு, மாடுக்கு காவலாக வளர்க்கும் நாய்களையே அப்படியே கவ்வி செல்வதால் நாய்களும் இதை கண்டால் ஓடி விடுகிறது. தவிர, சில காலமாக செந்நாய்களும் கூட்டம், கூட்டமாக அடிவாரப்பகுதிக்கு வரத்துவங்கியுள்ளது. ஆகவே, வனத்துறையினர் இப்பகுதியில் கண்காணிப்பை அதிகப்படுத்தி புலி நடமாட்டத்தை தவிர்க்கும் விதமாக அடர்ந்த வனப்பகுதிக்கு அனுப்ப ஏற்பாடுகள் மேற்கொள்வது அவசியமாகும்.இல்லாவிட்டால் கிராமத்திற்குள் வரத்துவங்கினால் கூண்டு வைத்து பிடித்து வனப்பகுதிக்கு அனுப்ப வேண்டி வரும் என கிராம மக்கள் அச்சம் தெரிவித்துள்ளனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.