முகப்பு
தற்போதைய செய்திகள்

கூடுதல் வரதட்சிணை கேட்டு துன்புறுத்தியதாக கணவர் உள்ளிட்ட 6 பேர் மீது வழக்கு

விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே இளம் பெண்ணிடம் கூடுதல் வரதட்சிணை கேட்டு துன்புறுத்தியதாக அவரது கணவர் உள்ளிட்ட 6 பேர் மீது அனைத்து மகளிர் காவல் நிலைய போலீஸார்

தற்போதைய செய்திகள்

கூடுதல் வரதட்சிணை கேட்டு துன்புறுத்தியதாக கணவர் உள்ளிட்ட 6 பேர் மீது வழக்கு

விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே இளம் பெண்ணிடம் கூடுதல் வரதட்சிணை கேட்டு துன்புறுத்தியதாக அவரது கணவர் உள்ளிட்ட 6 பேர் மீது அனைத்து மகளிர் காவல் நிலைய போலீஸார்

Updated On : 5 ஜனவரி, 2024 at 7:27 AM
பகிர்:

விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே இளம் பெண்ணிடம் கூடுதல் வரதட்சிணை கேட்டு துன்புறுத்தியதாக அவரது கணவர் உள்ளிட்ட 6 பேர் மீது அனைத்து மகளிர் காவல் நிலைய போலீஸார் திங்கள்கிழமை வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகேயுள்ள மகாராஜபுரத்தைச் சேர்ந்தவர் கருப்பசாமி மகள் முத்துலட்சுமி (23). இவருக்கும் திருப்பூர், திருபுளுவபட்டி, பெருமாள்கோவில் தெருவைச் சேர்ந்த கோவிந்தராஜ் மகன் சதீஷ்குமார் என்பவருக்கும் 25.3.12-ம் தேதி திருமணம் நடைபெற்றுள்ளது. திருமணத்தின் போது வரதட்சிணையாக 44 பவுன் தங்க நகைகள், ரூ.2 லட்சம் பெண் வீட்டார் கொடுத்துள்ளார்கள். தம்பதியினர் கூட்டுக் குடும்பம் நடத்தி வந்துள்ளார்கள்.

இந்நிலையில் சதீஷ்குமார், குடும்பத்தார் பேச்சைக் கேட்டுக் கொண்டு மனைவியிடம் வீடு வாங்க வேண்டும். கூடுதலாக ரூ.10 லட்சம் வரதட்சிணை வாங்கி வா என்று கூறி, துன்புறுத்தி வீட்டைவிட்டு விரட்டிவிட்டுள்ளார். இதனையடுத்து பெற்றோரிடம் சென்று முத்துலட்சுமி ரூ.2 லட்சம் வாங்கி வந்து கொடுத்துள்ளார்.

சதீஷ்குமாருக்கு நிரந்தர வேலை வாங்க வேண்டி ரூ.5 லட்சம் வாங்கி வரச்சொல்லி தொடர்ந்து சதீஷ்குமாரும் அவரது குடும்பதாரும் முத்துலட்சுமியை துன்புறுத்தி வந்துள்ளார்கள்.

இது குறித்து ஸ்ரீவில்லிபுத்தூர் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் முத்துலட்சுமி புகார் மனு தாக்கல் செய்தார். மனுவை விசாரித்தத நீதிமன்றம், ஸ்ரீவில்லிபுத்தூர் அனைத்து மகளிர் காவல் நிலைய போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரிக்க உத்தரவிட்டது. இதன் பேரில் போலீஸார், சதீஷ்குமார் அவரது தந்தை கோவிந்தராஜ், தாய் சித்ராதேவி, சகோதரர் மதிவாணன், சகோதரி இலக்கியா, இவரது கணவர் தெய்வேந்திரன் ஆகிய 6 பேர் மீது வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.

முழு கட்டுரையைப் படிக்க →