முகமுடி கொள்ளையர்கள் தாக்கியதில் முதியவர் காயம்
ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள ஹோட்டலில் வாட்ச்மேன் வேலை செய்து வந்த அழகுப்பிள்ளை சுகவீனம் காரணமாக கடந்த 1 மாதமாக வேலைக்குச் செல்லவில்லையாம்.இந்நிலையில் இரவு வீட்டில்
தற்போதைய செய்திகள்முகமுடி கொள்ளையர்கள் தாக்கியதில் முதியவர் காயம்
ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள ஹோட்டலில் வாட்ச்மேன் வேலை செய்து வந்த அழகுப்பிள்ளை சுகவீனம் காரணமாக கடந்த 1 மாதமாக வேலைக்குச் செல்லவில்லையாம்.இந்நிலையில் இரவு வீட்டில்
விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே முகமுடி கொள்ளையர்கள் தாக்கியதில் முதியவர் காயமடைந்து மருத்துமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
ஸ்ரீவில்லிபுத்தூர் அருகேயுள்ள துலுக்கன்குளம் கிராமத்தைச் சேர்ந்தவர் கு.அழகுப்பிள்ளை (60). குடும்ப பிரச்னை காரணமாக மனைவி லட்சுமி பிரிந்து சென்று, மகளுடன் தனியாக வசித்து வருகிறார்.
ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள ஹோட்டலில் வாட்ச்மேன் வேலை செய்து வந்த அழகுப்பிள்ளை சுகவீனம் காரணமாக கடந்த 1 மாதமாக வேலைக்குச் செல்லவில்லையாம்.இந்நிலையில் இரவு வீட்டில் அழகுப்பிள்ளை தூங்கிக் கொண்டிருந்துள்ளார். யாரோ எழுப்புவது போல இருந்துள்ளது. கண் முழித்துப் பார்த்தபோது, 25-30 வயது மதிக்கத் தக்க மூவர் மஞ்சள், கருப்பு மற்றும் பச்சைத் துணிகளை முகத்தில் மூடிக்கொண்டு நின்று கொண்டிருந்துள்ளார்கள். அதில் ஒருவர் கத்தியைக் காட்டி, ரூ.5 ஆயிரம் பணம் கேட்டுள்ளார். அழகுப்பிள்ளை இப்போது பணம் இல்லை. நாளை யாரிடமாவது வாங்கித் தருகிறேன் என்று கூறியுள்ளார். இதில் ஆத்திரமுற்ற கொள்ளையர்கள், அழகுப்பிள்ளையை பல இடங்களில் கத்தியால் குத்தியுள்ளனர். இது குறித்து காலையில் அறிந்த இவரது மருமகன் 108 ஆம்புலன்ஸிற்கு தகவல் கொடுத்து, அவர்கள் பலத்த காயமுற்ற அழகுப்பிள்ளையை ஸ்ரீவில்லிபுத்தூர் அரசு மருத்துமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.
இது குறித்து அழகுப்பிள்ளை, வன்னியம்பட்டி காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.