முகப்பு
தற்போதைய செய்திகள்

பழனியில் கடன் தொல்லையால் தாய், மகன் தற்கொலை

பழனி அடிவாரம் திலகர் வீதியை சேர்ந்தவர் தண்டபாணி.  இவர் அவ்வப்போது கிடைக்கும் வேலைகளுக்கு சென்று வந்துள்ளார்.  இவரது மனைவி கிருஷ்ணவேணி(40).  பழனி மலைக்கோயிலில் அன்னதானபிரிவில்

Updated On : 5 ஜனவரி, 2024 at 7:30 AM
பகிர்:

பழனியில் கடன் தொல்லையால் தாயும், மகனும் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டனர்.

பழனி அடிவாரம் திலகர் வீதியை சேர்ந்தவர் தண்டபாணி.  இவர் அவ்வப்போது கிடைக்கும் வேலைகளுக்கு சென்று வந்துள்ளார்.  இவரது மனைவி கிருஷ்ணவேணி(40).  பழனி மலைக்கோயிலில் அன்னதானபிரிவில் தற்காலிகமாக பணியாளராக வேலை செய்து வந்துள்ளார்.  இவர்களது மகன் சதீஷ்குமார்(13). இவர் திருவள்ளுவர் பள்ளியில் 7ம் வகுப்பு பயின்று வருகிறார்.  தண்டபாணி மதுரையில் ஒருவருக்கும் இடம் வாங்கித் தருவது தொடர்பாக பணம் பெற்றதை திருப்பி தர முடியாமல் சிரமப்பட்டு வந்துள்ளார். 

பணம் கொடுத்தவர்கள் அடிக்கடி வீட்டுக்கு வந்து தொந்தரவு செய்ததால் கணவன், மனைவி இடையே தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.  இந்நிலையில் தண்டபாணி செவ்வாய்க்கிழமை வெளியூர் சென்று விட்ட நிலையில் இரவு வீட்டில் யாரும் இல்லாதபோது கிருஷ்ணவேணியும், சதீஷ்குமாரும் சேலையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டனர்.  அவர்கள் காலின் கீழே தற்கொலைக்கு பயன்படுத்திய ஸ்டூல் இடறியதால் குப்புற கிடந்தது.  புதன்கிழமை காலையில் அக்கம்பக்கத்தினர் சம்பவம் குறித்து பழனி டவுன் காவல் நிலையத்துக்கு தகவல் கொடுத்தனர். 

சம்பவ இடத்துக்கு வந்த போலீஸார் தற்கொலை குறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.