முகப்பு
தற்போதைய செய்திகள்

இளம் பெண்ணை ஆசிட் வீசி கொலை செய்துவிடுவதாக மிரட்டல்: சிங்கப்பூர் வாலிபர் மீது வழக்கு

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே இளம் பெண்ணை ஆசிட் வீசி கொலை செய்து விடுவதாக மின்னஞ்சலில்

தற்போதைய செய்திகள்

இளம் பெண்ணை ஆசிட் வீசி கொலை செய்துவிடுவதாக மிரட்டல்: சிங்கப்பூர் வாலிபர் மீது வழக்கு

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே இளம் பெண்ணை ஆசிட் வீசி கொலை செய்து விடுவதாக மின்னஞ்சலில்

Updated On : 5 ஜனவரி, 2024 at 7:32 AM
பகிர்:

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே இளம் பெண்ணை ஆசிட் வீசி கொலை செய்து விடுவதாக மின்னஞ்சலில் மிரட்டல் விடுத்துள்ள சிங்கப்பூரில் வேலை செய்து வரும் இளைஞர் மற்றும் இதற்கு உடந்தையாக இருந்ததாக அவரது தாயார் மீதும் போலீஸார் வெள்ளிக்கிழமை வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகேயுள்ள பாப்பையநாயக்கன்பட்டியைச் சேர்ந்தவர் ராஜேந்திரன் மகள் ரேணுகாதேவி (24). இவருக்கும் ஜமீன்நத்தம்பட்டி, முத்தால்ராஜ் என்பவரின் மகன் சதீஷ்குமார் என்பவருக்கும் 9 மாதங்களுக்கு முன்னர் திருமணம் நிச்சயக்கப்படுள்ளது. சதீஷ்குமார் சிங்கப்பூரில் வேலை செய்து வருகிறார். இந்த இடைப்பட்ட காலத்தில் முத்தால்ராஜ் இறந்துவிட்டார். இதற்கு மகனுக்கு திருமணம் நிச்சயம் செய்யப்பட்ட ரேணுகாதேவிதான் காரணம் என்று சதீஷ்குமாரின் தாயார் ராமர் அம்மாள் கூறியுள்ளார். இதனால் நிச்சயம் நடைபெற்றதை முறித்துக் கொண்டுள்ளார்கள்.

மேலும் சதீஷ்குமாரின் பழக்கவழக்கம் பிடிக்காததால் ரேணுகாதேவியும் அவரது உறவை சதீஷ்குமாருடன் முறித்துக் கொண்டுள்ளார்.

இதில் ஆத்திரமுற்ற சதீஷ்குமார், ரேணுகாதேவிக்கு யாருடன் திருமணம் நடக்கவோ, நடத்தவோ விடமாட்டேன் என்றும், ஆசீட் ஊற்றி ரேணுகாதேவியை கொலை செய்து விடுவேன் என்றும் மின்னஞ்சல் மூலம் மிரட்டியுள்ளார். இது குறித்து ரேணுகாதேவி

மல்லி காவல் நிலையத்தில் புகார் செய்தார். போலீஸார் மனு ரசீது மட்டும் போட்டு விசாரிப்பதாக கூறி அனுப்பிவிட்டார்களாம்.

இதனையடுத்து மதுரையில் உள்ள உயர்நீதிமன்ற கிளையில் இது குறித்து ரேணுகாதேவி முறையிட்டார். மனுவை விசாரித்த உயர்நீதிமன்ற மதுரை கிளை, மல்லி போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரிக்க உத்தரவிட்டது. இதன் பேரில் போலீஸார் சதீஷ்குமார் மற்றும் அவரது தாய் ராமர் அம்மாள் ஆகியோர் மீது வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.

முழு கட்டுரையைப் படிக்க →