முகப்பு
தற்போதைய செய்திகள்

ஸ்ரீவில்லிபுத்தூரில் மர்ம காய்ச்சலுக்கு சிறுவன் பலி

விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூரி்ல் மர்ம காய்ச்சலுக்கு சிறுவன் பலியானார். நகராட்சி நிர்வாகம் தீவிர சுகாதார மற்றும் நோய் தடுப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளது.

Updated On : 5 ஜனவரி, 2024 at 7:32 AM
பகிர்:

விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூரி்ல் மர்ம காய்ச்சலுக்கு சிறுவன் பலியானார். நகராட்சி நிர்வாகம் தீவிர சுகாதார மற்றும் நோய் தடுப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளது.

ஸ்ரீவில்லிபுத்தூர், மங்காபுரம் வடக்குத் தெருவைச் சேர்ந்தவர் சுந்தர்ராஜ். இவரது மகன் வசந்த் வின் முகிலன் (4). இவர் தனியார் பள்ளியில் யு.கே.ஜி. படித்து வந்தார். கடந்த 6 நாட்களாகவே கடுமையான காய்ச்சல் இருந்துள்ளது. வீட்டில் வைத்து கவனித்து வந்துள்ளார்கள். பின்னர் ஸ்ரீவில்லிபுத்தூர் அரசு மருத்துவமனையில் குழந்தைகள் மருத்துவராக உள்ள ஒருவரிடம் காட்டியுள்ளார்கள்.

டெங்கு காய்ச்சல் பாதிப்பு தெரியவே, அவர் சிவகாசியில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு பரிந்துரைத்துள்ளார். அங்கு சேர்க்கப்பட்ட சிறுவன் உடல் நிலை மோசமடைந்து உயிரிழந்தார். ஸ்ரீவில்லிபுத்தூர் நகராட்சி நிர்வாகம் அனைத்து வார்டுகளிலும் ஒட்டு மொத்த துப்புரவுப் பணி மற்றும் சுகாதாரப் பணிகளை போர்க்கால அடிப்படையில் மேற்கொண்டுள்ளது.

மேலும் குடிநீர் தொட்டிகளில் அபேட் மருந்து முறைப்படி ஊற்றும் பணி, கொசு மருந்து அடிக்கும் பணி நடைபெற்று வருகிறது. குடிநீரை காய்ச்சி வடிகட்டி குடிக்கவும், காய்ச்சல் கண்டால் உடனடியாக ஸ்ரீவில்லிபுத்தூர் அரசு மருத்துவமனை மற்றும் அருகில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தை உடனடியாக அணுக நகராட்சி ஆணையாளர் பழனிவேல் கேட்டுக் கொண்டுள்ளார்.

முழு கட்டுரையைப் படிக்க →